முஸ்லிம்கள், எருமை, பாகிஸ்தான், லோடு கறுப்பு பணம்.. எல்லாம் பேசும் பாஜக இளைஞர்களை பற்றி பேசலையே?
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தல் களத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய திடுக்கிடும் பிரசார குரல்களைக் கேட்க முடிகிறது.. ஒரு கட்சியின் சரமாரி தாக்குதலுக்கு மற்றொரு கட்சி தனியாகவோ கூட்டணி சேர்ந்தோ பதிலடியாக கும்மி எடுப்பதையும் பார்க்க முடிகிறது.. இந்த தேசத்தின் எதிர்காலமான 'இளைஞர்கள்’ மீதான கரிசனத்தை குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜகவிடம் இருந்து எதிர்பார்க்கவே முடியவில்லையே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
18-வது லோக்சபா தேர்தலில் பாஜகவானது பிரதமர் மோடியை 'நம்பியே’ களம் காண்கிறது. பிரதமர் மோடிதான் உலக அளவில் இந்தியாவின் இமேஜை உயர்த்தியவர் என பெருமிதப்படுகிறது பாஜக. 80 கோடி இந்தியர்களுக்கு இலவச உணவு தானியம் தருகிறோம் என்கிறது அந்த கட்சி. ஆனால் காங்கிரஸோ எடுத்த எடுப்பில் இருந்தே வேலைவாய்ப்பின்மை, பண வீக்க விகிதம் என பட்டியல் போட்டு பிரசாரம் செய்கிறது.

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு: காங்கிரஸின் இந்த பதிலடிகளுக்கு விடை சொல்லாமல் அயோத்தி ராமர் கோவில், இடஒதுக்கீடு என இன்னொரு டிராக்கில் ஓடுகிறது பாஜக. அதுவும் எஸ்சி எஸ்டி ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்கப் போகிறது என பாரத பிரதமர் மோடி இடைவிடாமல் பிரசாரம் செய்வதுதான் ஹைலைட். ஆனால் ஒரு போதும் இந்தியாவின் முன்னேற்றம், வெளியுறவுக் கொள்கை என்கிற விஷயங்களில் பாஜக தலைவர்கள் மவுனமாகிவிடுகின்றனர்.
சொத்துகள் பறிமுதல்: அடுத்ததாக, அய்யய்யோ உங்கள் சொத்துகளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் பறித்துவிடும்; அப்படி பறிக்கிற சொத்துகளை முஸ்லிம்களுக்கே கொடுத்துவிடும் என்கிறார் பிரதமர் மோடி. இரண்டு எருமை வைத்திருந்தால் ஒரு எருமையை காங்கிரஸ் பறித்துக் கொண்டு போய் முஸ்லிம்களுக்கு கொடுக்கும் என்றெல்லாம் பிரதமர் மோடி பேசுகிறார். அதாவது இஸ்லாமியர்கள்தான் காங்கிரஸின் பிரதான வாக்கு வங்கி என்பதால் 'இந்துக்களை’ ஒருமுகப்படுத்தி வாக்கு அறுவடை செய்ய இந்த யுக்தியாம் பாஜகவுக்கு! அத்துடன் நிற்காமல் முஸ்லிம்களின் மக்கள் தொகை குறித்து தவறான பொய்யான கற்பிதங்கள், தரவுகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது பாஜக தரப்பு. இதனால்தான் மோடிக்கு இஸ்லாம்போபியோ பிடித்துவிட்டது என வெளுத்தெடுத்தது காங்கிரஸ்.
அம்பானி - அதானி லோடு பணம்: இந்த அக்கப்போர் பிரசாரங்களின் உச்சமாக, லோடு லோடாக டிரக் வண்டிகளில் அம்பானியிடமும் அதானியிடமும் இருந்து கறுப்பு பணத்தை குவித்துவிட்டது காங்கிரஸ் என ஒரே போடு போட்டு 'மிரள’ விட்டார் மோடி. இத்தனைக்கும் ராகுல் காந்திதான் அம்பானி- அதானி- மோடி கூட்டணி பற்றி இடைவிடாமல் பேசுகிறார். அப்படியான பேச்சை டைவர்ட் செய்ய அடித்துவிட்டது பாஜக. இப்போது காங்கிரஸ் ருத்ர தாண்டவமாடியது.. நாங்க லோடு லோடாக கறுப்பு பணம் வாங்கினது ஒரு பக்கம் இருக்கட்டும்.. நீங்க எத்தனை லோடு லோடாக கறுப்பு பணம் வாங்கினீங்க என பதிலுக்கு கேட்டு விளாசுகிறது.
பாகிஸ்தான்: வழக்கம் போல பாகிஸ்தானையும் பாஜகவும் பிரதமர் மோடியும் பரிவாரங்களும் விட்டு வைக்கவில்லை. நாங்க நினைத்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தே தீருவோம் என பேச, பாகிஸ்தான் கையில் வளையல் இல்லை.. அணு ஆயுதம் இருக்கு என இந்தியா கூட்டணி பதில் தர.. இதனை வைத்து லாவணி கச்சேரி களை கட்டுகிறது.
இளைஞர்கள் பற்றி?: நேரு- இந்திராதான் எல்லாவற்றும் காரணம், வாரிசு அரசியல், ராகுல் இளவரசர், நரசிம்மராவை மதிக்கவில்லை, சாஸ்திரியை புறக்கணித்ததனர் என அதே பல்லவியை பாஜகவும் பிரதமர் மோடி தரப்பும் மீண்டும் மீண்டும் பாடுகிறது. காங்கிரஸும் பதிலுக்கு பதில் பேசுகிறது. ஆனால் தேசத்தின் எதிர்காலமான 70% இளைஞர்களுக்கு என்ன திட்டம் கையில் இருக்கிறது என்பதைத்தான் சொல்ல நாதியற்றுப் போனார்கள் இந்திய இளைஞர்கள் மட்டுமல்ல பெண்களும்!
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications