ஆம்ஆத்மி - காங். ஷாக்! டெல்லி, இமாச்சல், ஹரியானாவை ஸ்வீப் செய்யும் பாஜக - நியூஸ் 18 கருத்து கணிப்பு
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் டெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களை பாஜக ஸ்வீப் செய்யும் என நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி ‛இந்தியா' கூட்டணி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

இந்தியாவில் 21 மாநிலங்களில் உள்ள 518 லோக்சபா தொகுதிகளில் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 சட்டசபை தொகுதிகளை சேர்ந்தவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மொத்தம் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
டெல்லி: இதில் டெல்லி மற்றும் ஹரியானாவில் அனைத்த இடங்களிலும் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இதில் ‛இந்தியா' கூட்டணி சார்பில் ஆம்ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. பாஜக தனித்து 7 இடங்களில் களமிறங்குகிறது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக தான் வெல்லும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் 7 இடங்களிலும் பாஜக கைப்பற்றியது. அதேபோன்ற நிலைமை தான் வரும் தேர்தலிலும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.
ஹரியானா: அதேபோல் ஹரியானாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. நேற்று ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் கர்னால் தொகுதியில் அவர் போட்டியிடும் நிலையில் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று பொறுப்பேற்றார்.
இங்கு மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 10 இடங்களிலும் பாஜக தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள ‛இந்தியா' கூட்டணிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஹரியானாவில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அதேபோல் தான் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல்: மேலும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தம் 4 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜக 3 தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சலில் ஒரு இடம் கூட கிடைக்காது. 4 தொகுதிகளிலும் பாஜக தான் வெல்லும் என நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications