இன்று காங்கிரஸ் முதல் வேட்பாளர்கள் பட்டியல்- ராகுல், பிரியங்கா போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் இடம் பெறக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
18-வது லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பது எதிர்பார்ப்பு. பாஜக தமது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. ஏற்கனவே ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

காங்கிரஸ் இடம் பெற்றுள்ள "இந்தியா" கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 லோக்சபா தேர்தலில் உ.பி. அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அமேதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். இதனால் ராகுல் காந்தி மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வயநாடு தொகுதியில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ராகுல் காந்தி அவரை எதிர்த்து வயநாடு தொகுதியில் களம் இறங்குவாரா? அல்லது தென் மாநிலங்களின் தொகுதி ஒன்றில் போட்டியிடுவாரா? அல்லது மீண்டும் அமேதிக்கே திரும்புவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். ராகுல், பிரியங்காவின் தாய் சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலியில் பிரியங்கா களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரியங்கா காந்தி, டாமன் டையூ லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிடுவார் என்கிற தகவலும் வெளியாகி இருந்தது.
இன்று வெளியாகும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர்களான அசோக் கெலாட், கமல்நாத் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் இடம் பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications