தென்னிந்தியாவை மிரட்டும் பாஜக- கர்நாடகாவில் 28-ல் 22 தொகுதிகளை தட்டித் தூக்குமாம்.. India TV சர்வே
டெல்லி: தென்னிந்தியாவிலேயே கர்நாடகா மாநிலத்தில்தான் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 22 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது India TV-CNX கருத்து கணிப்பு.
கர்நாடகா மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கோலோச்சிய மாநிலங்களில் ஒன்று. ஆனால் 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் பாஜகவின் செல்வாக்கு அபரிதமாக உயர்ந்துவிட்டது.

கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி வாக்களிக்கின்றனர் வாக்காளர்கள். ஆனால் 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் லோக்சபா தேர்தல்களில் பாஜகவுக்கே அதிகமான இடங்களை வாரி வழங்குகின்றனர் கன்னடர்கள்.
கர்நாடகாவில் தற்போதைய லோக்சபா தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜக டபுள் டிஜிட் இடங்களில் அமோக வெற்றி பெறும் என்பதுதான் பொதுவான கருத்து கணிப்பு முடிவுகள். ஒரு சில கருத்து கணிப்புகள்தான் காங்கிரஸ் டபுள் டிஜிட் இடத்தைப் பெற்று சரித்திரத்தை மாற்றும் என்கின்றன.
இந்த வரிசையில் India TV-CNX வெளியிட்ட லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்:
கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள்
பாஜக- 22
ஜேடிஎஸ்- 2
காங்கிரஸ்- 4
கடலோர கர்நாடகாவில் 3 தொகுதிகளைப் பாஜக கைப்பற்றும். வட கர்நாடகாவின் மொத்தம் 9 தொகுதிகளையுமே பாஜக அள்ளுமாம்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பாஜக - 25
ஜேடிஎஸ்- 1
காங்கிரஸ்- 1
சுயேட்சை -1
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பாஜக - 17
காங்கிரஸ்- 9
ஜேடிஎஸ்- 2
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பாஜக - 19
காங்கிரஸ்- 6
ஜேடிஎஸ்- 3
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பாஜக - 18
காங்கிரஸ்- 6
ஜேடிஎஸ்- 2
1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
காங்கிரஸ்- 18
பாஜக -7
ஜேடிஎஸ்- 3
1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பாஜக- 13
காங்கிரஸ்- 9
லோக்சக்தி- 3
ஜனதா தள்- 3












Click it and Unblock the Notifications