இன்றைய 'டெல்லி அரசியல் நிலவரம்'.. பாஜக, இந்தியா கூட்டணிக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு?
டெல்லி: 'சந்தை நிலவரம்' போல ஆகிவிட்டது இந்தியாவின் 'அரசியல் நிலவரம்'.. என்னதான் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்தாலும் எந்த கட்சி எந்த பக்கம் தாவுமோ என்கிற அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான போது பாஜக 303 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் பாஜக தனித்தே வென்றிருந்தது.

இதனால் பாஜக தனித்தே ஆட்சி அமைக்கவும் முடிந்தது. ஆனாலும் பாஜக தமது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளையும் இணைத்துக் கொண்டது. தற்போது நிலைமை அப்படி இல்லை. பாஜக வெறும் 240 இடங்களில்தான் வென்றது. பாஜகவால் தனிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. இதனால் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம், ஜேடிஎஸ், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் 'கிடைத்தவரை' ஆதாயம் என்பதாக கறார் பேரங்களில் ஈடுபட்டுள்ளன.
சரி தற்போதைய நிலைமையில் பாஜக, இந்தியா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களுடன் இருக்கின்றன?
தேசிய ஜனநாயகக் கூட்டணி - மொத்தம் 293
பாஜக- 240
தெலுங்குதேசம்- 16
ஐக்கிய ஜனதா தளம் 12
சிவசேனா (ஷிண்டே) 7
எல்ஜேபி (பஸ்வான்) 5
ஜேடிஎஸ் 2
ஜனசேனா 2
ஆர்எல்டி 2
யுபிபிஎல் 1
அசாம் கன பரிஷ 1
ஹெச்.ஏ.எம்- 1
என்சிபி அஜித் பவார் 1
எஸ்கேஎம்- 1
ஏஜேஎஸ்யூ-1
அப்னா தள் (எஸ்) 1
இந்தியா கூட்டணி மொத்தம் 234
காங்கிரஸ் 99
சமாஜ்வாதி 37
திரிணாமுல் காங்கிரஸ் 29
திமுக 22
உத்தவ் சிவசேனா 9
சரத்பவார் என்சிபி 8
சிபிஎம் 4
ஆர்ஜேடி 4
சிபிஐ 2
முஸ்லிம் லீக் 3
சிபிஎம்எ 2
விசிக 2
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3
தேசிய மாநாட்டு கட்சி 2
கேரளா காங்கிரஸ் 1
ஆர்எல்பி 1
பாரத் ஆதிவாசி கட்சி 1
மதிமுக 1
ஆம் ஆத்மி 3
ஆர்எஸ்பி 1
இந்தியா கூட்டணி ஆதரவு சுயேட்சைகள்:
பப்பு யாதவ்
சந்திரசேகர் ஆசாத்
விஷால் பட்டீல்
முகமது ஹனீபா
பாஜக கூட்டணிக்கு தாவும் வாய்ப்புள்ள கட்சி
உத்தவ் தாக்கரே சிவசேனா
இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள கட்சி
அஜித்பவார் என்சிபி
எந்த கூட்டணியிலும் இணையாத கட்சிகள்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4
சிரோமணி அகாலிதளம் 1
மஜ்லிஸ் கட்சி 1
ஆசாத் சமாஜ் கட்சி 1
ஜோரம் மக்கள் இயக்கம் 1
வாய்ஸ் ஆப் பீப்பிள் பார்ட்டி1
சில சுயேட்சை எம்பிக்கள் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications