லோக்சபா தேர்தல்: கர்நாடகாவில் பாஜகவுக்கு 'தர்ம அடி' காத்திருக்கிறதாம் - கதறவிடும் Lok Poll சர்வே!
டெல்லி: லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் அத்தனை இடங்களையும் வெல்வோம் என்ற பாஜகவில் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள்.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்த விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

தென்னிந்தியாவில் பாஜக அதிகபட்சம் 20 முதல் 25 இடங்களை பெற கூடிய வாய்ப்புள்ள ஒரே மாநிலம் கர்நாடகாதான். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக மட்டும் 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 1 இடமும் சுயேட்சைக்கு 1 இடமும் கிடைத்தன. இதனால் எப்படியும் கர்நாடகாவில் 20 முதல் 25 இடங்கள் கிடைக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை.
ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் மிகப் பெரும் தோல்வியை பாஜக சந்தித்தது. இருப்பினும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்பது பாஜகவின் கனவு. ஆனால் Lok Poll நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள், பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த Lok Poll கருத்து கணிப்பு முடிவு:
காங்கிரஸ் 12 முதல் 14 இடங்கள்
பாஜக 10 முதல் 12 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் 1 முதல் 2 இடங்கள்
கடந்த தேர்தலில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்திருந்தன. ஆனால் இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இதேபோல தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் விஸ்வரூப வெற்றியை பெறக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்கிறது Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள். 2019-ம் ஆண்டு தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 லோக்சபா தொகுதிகளில் அப்போது ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 9 இடங்களையும் பாஜக 4 இடங்களையும் காங்கிரஸ் 3, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியது.
ஆனால் 2024 லோக்சபா தேர்தல் களத்தில் நிலைமை தலைகீழாகும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு.
தெலுங்கானா குறித்த Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள்:
காங்கிரஸ் 8 முதல் 10 இடங்கள்
பிஆர்எஸ் கட்சி 3 முதல் 4 இடங்கள்
பாஜக 1 முதல் 2 இடங்கள்
இதர கட்சிகள் 0 முதல் 1 இடம்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications