தமிழகத்தில் பாஜக- 14 இடம்..இங்க மட்டுமல்ல..பல மாநிலங்களும் 'புகுந்து' விளையாடிய 'பகீர்'எக்ஸிட் போல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும் என பகீர் கிளப்பியதுதான் டுடேஸ் சாணக்கியா எக்ஸிட் போல். தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களும் டுடேஸ் சாணக்கியா வெளியிட்ட முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகள் குறித்த நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.

லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்றன. 18-வது லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் மத்தியில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுவாக தெரிவித்திருக்கின்றன. அதேநேரத்தில் எக்ஸிட் போல் முடிவுகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் சந்தேகத்துக்குரியவை என விமர்சிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்திருப்பது டுடேஸ் சாணக்கியாவின் ரிசல்ட்டுகளைத்தான்.

அகில இந்திய அளவில் பாஜக 335 ± 15; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 ± 15; காங்கிரஸ் கட்சிக்கு 50 ± 11; இந்தியா கூட்டணிக்கு 107 ± 11 இடங்களும் கிடைக்கும் என்கிறது டுடேஸ் சாணக்கியா. அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சிகளுக்கு கிடைக்கும் என டுடேஸ் சாணக்கியா வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள் இந்த கணக்குகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதுதான் திமுக உள்ளிட்ட கட்சிகளின் வாதம்.

உதாரணமாக தமிழ்நாடு தொடர்பாக டுடேஸ் சாணக்கியாவின் எக்ஸிட் போல் முடிவு என்ன தெரியுமா? திமுக 29 ± 5. அதிமுக 0 ± 2 சரி.. பாஜகவுக்கு அள்ளித் தந்திருக்கும் இடம் 10 ± 4 என்பதுதான். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாஜக 14 இடங்களைக் கைப்பற்றும் என்பதை பாஜக மேலிடத் தலைவர்களே கூட நம்ப மறுப்பார்கள் என்கிறது திமுக தரப்பு.

தமிழ்நாட்டில்தான் என்றில்லை.. ஒவ்வொரு மாநிலத்திலும் டுடேஸ் சாணக்கியா வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள்:

தெலுங்கானா
பாஜக: 12
காங்கிரஸ்: 5
ஓவைசி கட்சி: 0
பிஆர்எஸ்: 0

ஒடிஷா

பாஜக: 16
பிஜூ ஜனதா தளம்: 4
காங்கிரஸ்: 1

ஆந்திரா

பாஜக கூட்டணி : 22
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்: 3

பஞ்சாப்

பாஜக: 4
காங்கிரஸ்: 4
ஆம் ஆத்மி: 2

ராஜஸ்தான்

பாஜக: 22
காங்கிரஸ்: 2
இதர: 1

கர்நாடகா

பாஜக கூட்டணி: 24
காங்கிரஸ்: 4

மகாராஷ்டிரா

பாஜக கூட்டணி : 33
காங்கிரஸ் கூட்டணி: 15

மேற்கு வங்கம்

பாஜக 24 ± 5
திரிணாமுல் காங்கிரஸ் 17 ± 5
காங்கிரஸ் + 1 ± 1

பீகார்

பாஜக கூட்டணி 36 ± 4
காங்கிரஸ் 4 ± 4
இதர 0 ± 1

கேரளா

காங்கிரஸ் கூட்டணி 15 ± 3
இடதுசாரிகள் 1 ± 1
பாஜக 4 ± 3

இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் டுடேஸ் சாணக்கியா எக்ஸிட் போல் முடிவுகள் கணித்திருக்கும் இடங்கள்தான் 'அதீதமானவை'; நம்பகத்தன்மையையே கேள்விக்குறியதாக்குகிறது என்பதுதான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களின் வாதம். எது உண்மை என்பது ஜூன் 4-ந் தேதி தெரியத்தானே போகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+