முதல் கட்ட லோக்சபா தேர்தல்: நாளை களம் காணும் 8 மத்திய அமைச்சர்கள், 3 மாஜி முதல்வர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 102 தொகுதிகளில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதல்வர்கள் களம் காண்கின்றனர்.

நாட்டின் 18-வது லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின் 1 தொகுதியிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Lok Sabha Election 2024 Phase-1 8 Union ministers 3 Ex Chief Ministers one ex-governor in fray

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் வாக்குப் பதிவு?:

1) அருணாச்சல பிரதேசம்- 2 (மொத்தம் 2)
2) அஸ்ம்: 5 (மொத்தம் 14)
3) பீகார்: 4 (மொத்தம் 40)
4) சத்தீஸ்கர்: 1 (மொத்தம் 11)
5) மத்தியப் பிரதேசம்: 6 (மொத்தம் 29)
6) மகாராஷ்டிரா: 5 (மொத்தம் 48 )
7) மணிப்பூர்: 2 (மொத்தம் 2)
8) மேகாலயா: 2 (மொத்தம் 2)
9) மிசோரம்: 1 (மொத்தம் 1)
10) நாகாலாந்து: 1 (மொத்தம் 1)
11) ராஜஸ்தான்: 12 (மொத்தம் 25)
12) சிக்கிம்: 1 (மொத்தம் 1)
13) தமிழ்நாடு: 39 (மொத்தம் 39)
14) திரிபுரா: 1 (மொத்தம் 2)
15) உத்தரபிரதேசம்: 8 (மொத்தம் 80)
16) உத்தரகாண்ட்: 5 (மொத்தம் 5)
17) மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42)
18) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்: 1 (மொத்தம் 1)
19) ஜம்மு காஷ்மீர்: 1 (மொத்தம் 5)
20) லட்சத்தீவு: 1 (மொத்தம் 1)
21) புதுச்சேரி: 1 (மொத்தம் 1)

களம் காணும் மத்திய அமைச்சர்கள் யார் யார்?

1) நிதின் கட்காரி (நாக்பூர், மகாராஷ்டிரா
2) கிரென் ரிஜுஜூ (அருணாச்சல் மேற்கு, அருணாச்சல பிரதேசம்)
3) சர்பானந்த சோனோவால் (திப்ரூகர், அஸ்ஸாம்)
4) சஞ்சீவ் பல்யான் (முசாபர்நகர், உத்தரப்பிரதேசம்)
5) எல்.முருகன் (நீலகிரி, தமிழ்நாடு)
6) ஜிதேந்திர சிங் (உதம்பூர், ஜம்மு காஷ்மீர்)
7) பூபேந்திர யாதவ்( அல்வார், ராஜஸ்தான்)
8 ) அர்ஜூன் மேக்வால் (பிகானீர், ராஜஸ்தான்)

களம் காணும் முன்னாள் முதல்வர்கள் யார் யார்?:

1) ஓ.பன்னீர்செல்வம்( தமிழ்நாடு) ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி, அதிமுகவின் ஜெயபெருமாள் போட்டியிடுகின்றனர்.

2) நபம் துகி, (அருணாச்சல பிரதேசம்) அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவை எதிர்த்து களம் காண்கிறார் நபம் துகி.

3) பிப்லாப் குமார் தேப் (திரிபுரா) , மேற்கு திரிபுரா தொகுதியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஷிஸ் குமார் ஷாகாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

களம் காணும் மாஜி ஆளுநர்: முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் தென் சென்னை ( தமிழ்நாடு) லோக்சபா தொகுதியில் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்- பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுகவின் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+