லோக்சபா தேர்தல் முதல் கட்டம் 66.14% வாக்குகள் பதிவு- தமிழகத்தில் எங்கு அதிகம்? குறைவு? முழுமையாக!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலின் முதல் கட்டத்தில் 66.14% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2-வது கட்டத்தில் 66.71% வாக்குகள் பதிவாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக நடைபெற்றது. 2-வது கட்டமாக கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட 88 தொகுதிகளில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

Lok Sabha Election 2024 Phase 1 Full Details of Voter turnout in Tamil Nadu

லோக்சபா தேர்தலின் இரு கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பதை முழுமையாகவோ இறுதியாகவோ தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது பெரும் சர்ச்சையானது. இந்திய தேர்தல் ஆணையம் இந்த புள்ளி விவரங்களை ஏன் அறிவிக்கவில்லை என அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை நடைபெற்ற லோக்சபா தேர்தலின் 2 கட்ட வாக்குப் பதிவு விவரங்களை முழுமையாக வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 66.14% வாக்குகள் பதிவாகின. ஆண் வாக்காளர்கள் 66.22%; பெண் வாக்காளர்கள் 66.07%; 3-ம் பாலினத்தவர் 31.32% வாக்களித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான அதிகாரப்பூர்வமான வாக்கு விகிதம்:

அரக்கோணம் 74.19%
ஆரணி 75.76%
மத்திய சென்னை 53.96%
வட சென்னை 60.11%
தென் சென்னை 54.17%
சிதம்பரம் 76.37%
கோயம்புத்தூர் 64.89%
கடலூர் 72.57%
தருமபுரி 81.20%
திண்டுக்கல் 71.14%
ஈரோடு 70.59%
கள்ளக்குறிச்சி 79.21%
காஞ்சிபுரம் 71.68%
கன்னியாகுமரி 65.44%
கரூர் 78.70%
கிருஷ்ணகிரி 71.50%
மதுரை 62.04%
மயிலாடுதுறை 70.09%
நாகப்பட்டினம் 71.94%
நாமக்கல் 78.21%
நீலகிரி 70.95%
பெரம்பலூர் 77.43%
பொள்ளாச்சி 70.41%
ராமநாதபுரம் 68.19%
சேலம் 78.16%
சிவகங்கை 64.26%
ஸ்ரீபெரும்புதூர் 60.25%
தென்காசி 67.65%
தஞ்சாவூர் 68.27%
தேனி 69.84%
திருவள்ளூர் 68.59%
தூத்துக்குடி 66.88%
திருச்சிராப்பள்ளி 67.51%
திருநெல்வேலி 64.10%
திருப்பூர் 70.62%
திருவண்ணாமலை 74.24%
வேலூர் 73.53%
விழுப்புரம் 76.52%
விருதுநகர் 70.22%

தமிழகம் 39 தொகுதிகள் 2024-ம் ஆண்டு வாக்குப் பதிவு- 2019-ம் ஆண்டு வாக்குப் பதிவு விவரங்கள்

Lok Sabha Election 2024 Phase 1 Full Details of Voter turnout in Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+