4-ம் கட்ட லோக்சபா தேர்தல்: ரூ7, ரூ83, ரூ90 முதல் ரூ1,000 மட்டுமே வைத்திருக்கும் 10 வேட்பாளர்கள்!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலின் 4-வது கட்ட களத்தை எதிர்கொண்டுள்ள வேட்பாளர்களில் 10 பேர் தங்களுக்கு ரூ7, ரூ83, ரூ90 தான் சொத்து என வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பதாக சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துவிட்டது.

4-வது கட்டமாக மே 13-ந் தேதி 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் களத்தில்
1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 96 தொகுதிகளுக்கு மொத்தம் 4264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1970 வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது.
தெலுங்கானாவில் 17 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 1488 வேட்பு மனுக்களும் அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 25 தொகுதிகளில் இருந்து 1103 வேட்பு மனுக்களும் மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 177 வேட்பு மனுக்களும் நல்கொண்டா மற்றும் போங்கிர் தொகுதியில் தலா 114 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆகும்.
இத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களின் சொத்து விவரங்களில் 10 பேர் தங்களுக்கு ரூ7 முதல் ரூ1,000 வரை மட்டுமே சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
1. ஆந்திராவின் பபட்டா தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை கட்டா ஆனந்த் பாபு தம,க்கு ரூ7தான் சொத்து மதிப்பு என குறிப்பிட்டுள்ளார்.
2. மகாராஷ்டிரா மாநிலம் மாவல் தொகுதியில் போட்டியிடும் பீம் சேனாவின் சந்தோஷ் உபலே ரூ83தான் சொத்து என தெரிவித்துள்ளார்.
3. மகாராஷ்டிராவின் ஷிரூரில் போட்டியிடும் சுயேட்சை பொர் விகார் ரோகிதாஸ் ரூ90 தான் சொத்து என்கிறார்.
4. மகாராஷ்டிராவின் நந்துர்பர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ரூ500தான் சொத்து என தெரிவித்திருக்கிறார்.
5. மகாராஷ்டிராவின் பீட் தொகுதி குடியரசுக் கட்சி வேட்பாளர் (பிரபுத்தா) ஷேசெரோ சோகோபா வீர் ரூ500தான் சொத்து இருக்கிறது என கூறியுள்ளார்.
6. மகாராஷ்டிராவின் புனே தொகுதியில் மராத்தா கட்சியின் சார்பில் போட்டியிடும் விஜயலக்ஷ்மி ஶ்ரீகாந்த் சிந்தகிக்கு ரூ1000தான் சொத்தாம்.
7. தெலுங்கானாவின் பெட்டபல்லே தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய மனவ் கட்சி வேட்பாளர் கன்டி சந்து ரூ1,000தான் சொத்து இருக்கிறது என்கிறார்.
8. தெலுங்கானாவின் வாரங்கல் தொகுதி சுயேட்சை வேட்பாளர் சுலுவேரு பிரதாப்பும் ரூ1,000 தான் சொத்து என குறிப்பிட்டுள்ளார்.
9. தெலுங்கானா மகபூபாபாத் தொகுதியில் பார்வார்ட் பிளாக் கட்சியின் அருண் குமார் மைபாதி ரூ1,000 சொத்து எனத் தெரிவித்துள்ளார்.
10. தெலுங்கானாவின் நலகொண்டா தொகுதியின் பிக்ஷாபதி லந்தா தமக்கு ரூ1,500தான் சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications