Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதனையை உருவாக்கும் வகையில் ஓட்டுப் போடுங்க.. முதல் முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலில் சாதனையை உருவாக்கும் வகையில் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் லோக்சபா தேர்தல் குறித்து பேசியதாவது: சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் "என்னுடைய முதல் வாக்கு - தேசத்தின் பொருட்டு" என்பதைத் தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

Lok Sabha Election 2024: PM Modi appeals to First time Voters to Vote in Record Numbers

சாதனைப் பதிவாக வாக்களியுங்கள்: உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு. நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு இலாபகரமானதாக இருக்கும். நானும் கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனைப்பதிவேற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள்.

18-வது லோக்சபா: 18 வயது ஆன பிறகு, 18ஆவது மக்களவைக்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த 18ஆவது மக்களவையும் கூட இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் அடையாளமாக விளங்கும். ஆகையால் உங்களுடைய வாக்கின் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது.

விழிப்போடு விவாதியுங்கள்: பொதுத் தேர்தல்களின் இந்த அமளிக்கு இடையே, இளைஞர்களே, நீங்கள், அரசியல் வழிமுறைகளின் அங்கமாக ஆவதோடு கூடவே, இது தொடர்பாக நடைபெறும் வாதம்-விவாதங்கள் தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். மேலும் நினைவில் வைத்திருங்கள் - என்னுடைய முதல் வாக்கு - தேசத்தின் பொருட்டு என்பதை. விளையாட்டுத் துறையாகட்டும், திரைத் துறையினராகட்டும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களாகட்டும், பிற தொழில் வல்லநர்களாகட்டும், அல்லது நமது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ ட்யூப் ஆகட்டும் இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுங்கள், நிபுணர்களே, முதன்முறையாக வாக்களிக்கும் நமது வாக்காளர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தாக்கமேற்படுத்துபவர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

110 மனதின் குரல் உரைகள்: மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மாதம் தேசத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான சூழல் நிலவுகிறது, கடந்த முறையைப் போன்றே, மார்ச் மாதத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியின் கடந்த 110 பகுதிகளாக நாம் இதை அரசின் தாக்கத்திலிருந்து தள்ளி வைத்தே வந்திருக்கிறோம் என்பதே கூட மனதின் குரலின் மிகப்பெரிய வெற்றியாகும். மனதின் குரலில், தேசத்தின் சமூக சக்தி பற்றி பேசப்படுகிறது, தேசத்தின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. இது ஒரு வகையிலே மக்களின் மக்களுக்காக, மக்கள் வாயிலாக தயார் செய்யப்படும் நிகழ்ச்சியாகும்.

3 மாதம் மனதின் குரல் கிடையாது: அரசியல் கண்ணியத்தைப் பின்பற்றும் வகையில், மக்களவைத் தேர்தல் என்ற இப்போதைய காலகட்டத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதின் குரலின் ஒலிபரப்பு நடைபெறாது. அடுத்த முறை நாம் உரையாடுவது மனதின் குரலின் 111ஆவது பகுதியாக இருக்கும். அடுத்த முறை மனதின் குரலின் தொடக்கம் 111 என்ற சுபமான எண்ணோடு கூடவே இருக்கும், இதை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+