ஓயவிடாத “இந்தியா” கூட்டணி? இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணி அடுத்த லோக்சபா தேர்தல் களத்தில் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அண்மையில் ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனையை முன்வைத்து ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணி எம்பிக்களும் ஒருங்கிணைந்து போராடுகின்றனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளன எதிர்க்கட்சிகள். இதனைத் தொடர்ந்து 21 எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒன்றாக மணிப்பூர் மாநிலம் சென்று, மணிப்பூர் நிலைமைகளை ஆய்வும் செய்து டெல்லி திரும்பினர். மேலும் அடுத்த "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
"இந்தியா" கூட்டணியின் இந்த விஸ்வரூபம் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து வருகிறது. இதை எதிர்கொள்ளும் விதமாக பிரதமர் மோடி இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டணியின் கட்சிகள் பலவற்று லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் இல்லை. பிரதமர் மோடியின் கூட்டணி கட்சி எம்.பிக்களுடனான இந்த சந்திப்பு அடுத்த 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுமாம். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் கூட்டணி கட்சி எம்.பிக்களுடன் முதல் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications