6-வது கட்ட தேர்தல்- நாளை வாக்குப் பதிவு! மேனகா காந்தி, மெகபூபா முப்தி, சுஷ்மா ஸ்வராஜ் மகள் போட்டி!
டெல்லி: லோக்சபா தேர்தலின் 6-வது கட்டமாக 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 6-வது கட்ட தேர்தலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பாஜகவின் மேனகா காந்தி, மறைந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள்.
லோக்சபா தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
6-வது கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகள்:
பீகார் (8 இடங்கள்)
1. வால்மீகி நகர்
2. பாஸ்கிம் சம்பரன்
3. பூர்வி சம்பரன்
4. ஷியோஹர்
5. வைஷாலி
6. கோபால்கஞ்ச்
7. சிவன்
8. மகாராஜ்கஞ்ச்
ஹரியானா (10 இடங்கள்)
1. அம்பாலா
2. குருக்ஷேத்திரம்
3. சிர்சா எஸ்சி
4. ஹிசார்
5. கர்னல்
6. சோனிபட்
7. ரோஹ்தக்
8. பிவானி-மகேந்திரகர்
9. குர்கான்
10. ஃபரிதாபாத்
ஜம்மு காஷ்மீர் (1இடம்)
1. அனந்த்நாக்-ரஜௌரி
ஜார்கண்ட் (4 இடங்கள்)
1. கிரிதிஹ்
2. ராஞ்சி
3. ஜாம்ஷெட்பூர்
4. தன்பாத்
டெல்லி (7)
1. சாந்தினி சௌக்
2. வடகிழக்கு டெல்லி
3. கிழக்கு டெல்லி
4. புதுடெல்லி
5. வடமேற்கு டெல்லி
6. மேற்கு டெல்லி
7. தெற்கு டெல்லி
ஒடிஷா (6 இடங்கள்)
1. சம்பல்பூர்
2. கியோஞ்சர்
3. டென்கனல்
4. பூரி
5. புவனேஸ்வர்
6. கட்டாக்
உத்தரப் பிரதேசம் (14 இடங்கள்)
1. சுல்தான்பூர்
2. பிரதாப்கர்
3. புல்பூர்
4. அலகாபாத்
5. அம்பேத்கர் நகர்
6. டோமரியகஞ்ச்
7. சந்த் கபீர் நகர்
8. லால்கஞ்ச்
9. அசம்கர்
10. ஜான்பூர்
11. மச்லிஷாஹர்
12. பதோஹி
13. ஷ்ரவஸ்தி
14. பஸ்தி
மேற்கு வங்கம் (8 இடங்கள்)
1. தம்லுக்
2. காந்தி
3. கட்டல்
4. ஜார்கிராம்
5. மேதினிபூர்
6.புருலியா
7. பாங்குரா
8. பிஷ்ணுபூர்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.
புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக பன்சுரி ஸ்வராஜ் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதியுடன் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி மோதுகிறார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸின் கன்னையாகுமார் போட்டியிடுகிறார்.
உ.பி. சுல்தான்பூரில் மேனகா காந்தி, பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். ஹரியானாவின் கர்னால் தொகுதியில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குருஷேத்ராவில் பாஜகவின் நவீன் ஜிண்டால் போட்டியிடுகின்றனர். ஒடிஷாவின் பூரியில் பாஜகவின் சம்பித் பத்ரா, சம்பல்பூரில் தர்மேந்திர பிரதான் களம் காண்கின்றனர்.












Click it and Unblock the Notifications