6-வது கட்ட லோக்சபா தேர்தல்: 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளில் 889 வேட்பாளர்கள்!
டெல்லி: 6-வது கட்ட லோக்சபா தேர்தல் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளில் 889 பேர் போட்டியிடுகின்றனர்.
லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். இந்த தொகுதிக்கான மனுதாக்கல் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.
மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு மொத்தம் 1978 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 6 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்ததில், 900 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது. அதில் மனுக்களை விலக்கிக் கொண்டவர்கள் தவிர இறுதியாக 889 பேர் களத்தில் உள்ளனர்.
6-ம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2024 மே 25-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
6-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள்: வால்மீகி நகர், பாஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மஹராஜ்கஞ்ச், அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத், கிரிதிஹ், ரஞ்சி, தன்பல்ஷேத் , கியோஞ்சர், தேன்கனல், பூரி, புவனேஸ்வர், கட்டாக், சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், கன்திஹத்ல், ஜேஹர்க்லால் மெடின்பூர், , புருலியா, பங்குரா, பிஷ்ணுபூர், சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications