மோடியின் டார்க்கெட் 400-ஐ தொடும் என்டிஏ.. இந்தியா கூட்டணிக்கு பெரும் அடி! இந்தியா டுடே Exit poll
டெல்லி: பிரதமர் மோடி 400 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பேசி வந்த நிலையில், பாஜக கூட்டணி 361 முதல் 401 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக இன்றுடன் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்றுடன் நடந்து முடிந்துள்ளது. வரும் 4 ஆம் தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

லோக்சபா தேர்தல்: இதில் பெரும்பாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. பாஜக தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரச்சாரம் செய்து வந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் 350 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு: பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்த நிலையில் சற்று குறைவாகவே 350 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், பாஜக கூறியது போல் 400 தொகுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
400 இடங்கள்: இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணி 361 முதல் 401 இடங்களில் வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி 131 முதல் 166 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. பிற கட்சிகள் 20 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவையில் ஷாக் கொடுத்த எக்ஸிட் போல்.. 4ம் தேதி என்ன நடக்குது பாருங்க.. அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்
முந்தைய லோக்சபா தேர்தல்கள்: கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி - 336 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், காங்கிரஸ் மட்டும் 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
இதேபோல், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களில் வென்றது. பாஜக 303 இடங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை வென்றது. காங்கிரஸ் மட்டும் 52 இடங்களில் வெற்றி பெற்றது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications