Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ் வெற்றி..பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி 315 இடங்களை அடிச்சு தூள் கிளப்புமாம்-India Tv சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 315 இடங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைக்கும் என்கிறது India TV- CNX கருத்து கணிப்பு முடிவுகள்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

Lok Sabha Election: NDA may get 315; I.N.D.I.A bloc 172- India TV-CNX Poll

பாஜக கூட்டணிக்கு 315 இடங்கள்: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த India TV- CNX கருத்து கணிப்பு விவரம்: மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி- 315 இடங்கள்; காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா" கூட்டணி - 172 இடங்கள்; இதர மாநில கட்சிகள், சுயேட்சைகள் -56 இடங்கள் பெறக் கூடுமாம்.

பாஜகவுக்கு 293: கட்சிகள் அடிப்படையில் தற்போது 303 எம்.பி.க்களைக் கொண்ட பாஜக 293 இடங்களில் வெல்லுமாம்; 52 இடங்களில் கடந்த முறை வென்ற காங்கிரஸ் கட்சி இம்முறை 70 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.

திமுக 4-வது பெரிய கட்சி: பாஜக, காங்கிரஸுக்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 4-வது பெரிய கட்சியாக 21 இடங்களில் திமுக வெல்லுமாம். கடந்த முறை திமுக 24 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இதர மாநில கட்சிகள்: உத்தவ் தாக்கரே சிவசேனா- 8; ஆம் ஆத்மி- 6; பிஜேடி- 13; ஏக்நாத் ஷிண்டே சிவசேனா-4 இடங்களில் வெல்லுமாம்.

உ.பி.யில் பாஜக ஆதரவுப் பேரலை: மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73 இடங்களைக் கைப்பற்றக் கூடும்; பாஜக மட்டுமே 71 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தள் 2 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாம். இதர 7 தொகுதிகளில் "இந்தியா" கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதாம்.

எந்தெந்த மாநிலத்தில் பாஜக ஸ்வீப்?: குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக அள்ளுமாம்; அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தின் 5 லோக்சபா தொகுதிகளிலுமே பாஜகதான் ஜெயிக்குமாம். கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 18 இடங்களில் வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.

எந்தெந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஸ்வீப்?: கேரளாவில் ஆளும் இடதுசாரி, காங்கிரஸ் முன்னணியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் தட்டி தூக்கிடுமாம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா" கூட்டணி மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 32 ஐ கைப்பற்றிவிடுமாம். எஞ்சிய 10 தொகுதிகளில்தான் பாஜக கூட்டணி வெல்லுமாம்.

தமிழ்நாட்டில் நிலவரம் என்ன: தமிழ்நாட்டில் திமுகவை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி 32 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் பாஜக கூட்டணி 1 இடத்திலும் வெல்லுமாம். இவ்வாறு India TV- CNX கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+