தமிழகத்தில் பாஜக வெல்ல வேண்டும்.. அதுதான் குறிக்கோள்.. பாஜகவினருக்கு அமித் ஷா கட்டளை!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேட்டியளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேட்டியளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் சூடு கூடிக்கொண்டே செல்கிறது. லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் முழுதாக 4 மாதங்கள் இருக்கிறது.

இதற்காக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வடமாநிலங்களில் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

விரைவில் தமிழகம்

விரைவில் தமிழகம்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் வர இருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இதனால் தமிழகத்தில் அதிக கவனம் செலுத்த பாஜகவினர் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

வங்கத்தில் மோசம்

வங்கத்தில் மோசம்

இந்த நிலையில் நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இதுகுறித்து பேசினார். அதில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. இங்கு மமதா பானர்ஜி கொடுங்கோலர் போல செயல்படுகிறார். மேற்கு வங்கத்தில் இருக்கும் மமதாவின் ஆட்சியை அகற்றி பாஜகவின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். பாஜகவின் ஒரே கோரிக்கை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் வெற்றி

தமிழகத்தில் வெற்றி

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது மிக முக்கியமானது. ஒடிஷா, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற வேண்டும். முக்கியமாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டியது அவசியம். தென்னிந்தியாவில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக கொடி

பாஜக கொடி

இந்தியா முழுக்க பாஜக வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும். முக்கியமாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை வெல்ல வேண்டும். தமிழகத்தில் பாஜக வென்றால்தான், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் கொடி நாட்டப்படும். அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்று அமித் ஷா பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+