ஜனவரி இறுதியில் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல்- 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு 'கல்தா'- பலியாடுகள் யார்?
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான முதல் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இம்மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட பாஜக சீனியர் தலைவர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக இந்த முறை வட இந்திய மாநிலங்களில் 2019-ம் ஆண்டை விட அதிகமான தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாம். 2019-ம் ஆண்டு பாஜக, மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 436-ல் போட்டியிட்டது. இதில் 303 இடங்களைக் கைப்பற்றியது. 133 தொகுதிகளில் தோவியை சந்தித்தது. பாஜகவைப் பொறுத்தவரை 2019-ல் தோல்வி அடைந்த 133 தொகுதிகள் மற்றும் சொற்ப வாக்குகளில் வென்ற 31 தொகுதிகள் என மொத்தம் 164 தொகுதிகளில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை இந்த 164 தொகுதிகளில் பொறுப்பாளர்களாகவும் பாஜக அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், அண்ணா திமுக, மகாராஷ்டிராவில் சிவசேனா, ராஜஸ்தானில் ஆர்.எல்.பி ஆகிய கட்சிகள் இடம் பெறவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவுமே இல்லை என்கிற நிலைமைதான். இதனால் இயல்பாகவே பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டாக வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பாஜக அதிக இடங்களில் போட்டியிடும் போது தமது இலக்கான 50% வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதும் பாஜகவின் கணக்கு.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ஜனவரி மாதத்தின் இறுதியில் வெளியிடுவது என பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம். முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெறக் கூடுமாமா. 2019-ம் ஆண்டு பார்முலாவின் படியே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதே நேரத்தில் பல மாநிலங்களில் பாஜகவின் சீனியர் தலைவர்கள் குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம் போல தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதாம் பாஜக. அதே நேரத்தில் மூத்த தலைவர்களுக்கு மட்டும் இது விதி விலக்காக இருக்கும் என்கின்றன பாஜக வட்டாரங்கள். இதனால் பாஜகவின் சீனியர்களில் யார் பலியாடுகளாக அரசியலை விட்டு ஒதுக்கப்பட போகிறார்கள்? என்பது பெரும் எதிர்பார்ப்பாகும்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications