சென்னை மண்டலத்தில் அதிமுகவுக்கு முட்டை! ஜஸ்ட் பாஸ் பாஜக! பக்கா மாஸ் திமுக.. நியூஸ் 18 கணிப்புகள்
டெல்லி: மக்களவை தேர்தலில் சென்னை மண்டலத்தில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் பாஜக கூட 2 இடங்களில் வெல்லும் என நியூஸ் 18 கருத்து கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
சென்னை மண்டலத்தில் உள்ள 6 லோக்சபா தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக கூட்டணியும் இரு தொகுதிகளில் பாஜக கூட்டணியும் வெல்லும் என கணிக்கப்பட்டது. அதிமுகவுக்கு முட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 518 லோக்சபா தொகுதிகளில் 21 முக்கிய மாநிலங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று மாலை வெளியானது. அதில் தமிழகத்தில் எந்த கட்சி அதிக அளவிலான இடங்களில் வெல்லும் என்பது குறித்தும் தமிழகத்தில் மண்டலவாரியாகவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அவ்வாறு அறிவிக்கப்பட்டதில் சென்னையில் சென்னை தெற்கு, சென்னை வடக்கு, மத்திய சென்னை , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளில் பாஜக 2 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவோ ஒரு தொகுதியிலும் வெல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலில் அதிமுக மொத்தம் 4 இடங்களில்தான் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அவை மண்டலவாரியாக பார்த்தால் காவேரி டெல்டாவில் ஒரு இடமும் தென் மண்டலத்தில் இரு இடங்களிலும் கொங்கு மண்டலத்தில் ஒரு இடத்திலும் வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கூட அதிமுக தமிழகத்தில் தேனியை தவிர ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அது போல் அந்த கூட்டணியில் அங்கம் வகித்த பாஜகவும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஆனால் இந்த லோக்சபை தேர்தலில் பாஜக மொத்தமாக 5 இடங்களிலும் சென்னை மண்டலத்தில் இரு இடங்களிலும் வெல்லும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
கருத்துக் கணிப்பைகளையும் முழுவதுமாக நம்பக் கூடாது என்றாலும் அதை அப்படியே புறம்தள்ளிவிடவும் முடியாது. காரணம், சில நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டால் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருந்திருக்கின்றன.
பாஜகவுடன் கூட்டணியால்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைவதாக மூத்த நிர்வாகிகள் சிலர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாகிவிட்டது. எனினும் தமிழகத்தில் ஒற்றை இலக்கம் என்றால் ஒரு இடத்தில் கூட வெல்லாது, தாமரை மலராது என பலர் அடித்து கூறியிருந்தாலும், பாஜக கணிசமான இடங்களில் வென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை தருகிறது.
அது போல் திமுக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சென்னை மண்டலத்தில் 5 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வெல்லும் என கணிப்புகள் கூறுகின்றன. நீட், ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, சமையல் சிலிண்டர் எரிவாயு விலை, பெட்ரோல் டீசல் விலை, விலை வாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜகவின் தாமரை லேசாக மலரத் தொடங்கியுள்ளது அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications