இத்தனை நடைமுறைகளா? லோக்சபா தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்.. முழு விபரம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Lok Sabha Elections Results 2019: தேர்தல் முடிவுகள் உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்?
டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் விவிபாட் வாக்குகளை எண்ணுவது உட்பட பல முக்கியமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி தலைமையிலான ஆட்சி முடிந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.

542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய தேர்தல் மே 19ம் தேதி நிறைவு பெற்றது. நடந்து முடிந்த இந்த 17வது லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெற இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் வாக்குகளை எண்ண பின்வரும் படிகள் பின்பற்றப்படும்:
- வாக்குகளை எண்ண நியமிக்கப்பட்டு இருக்கும் பணியாளர்கள் எல்லோரும் 5 மணிக்கு மையத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.
- வாக்கு எண்ணிக்கை, கண்காணிப்பு அதிகாரிகளின் முன்னிலையில் 8 மணிக்கு தொடங்கும்.
- தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் சேர்த்து வேட்பாளர்கள் நியமித்த கண்காணிப்பு ஏஜென்ட்கள் பணிக்கு இருப்பார்கள்.
- வாக்கு எண்ணிக்கைக்கு முன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சோதனை செய்யப்படும்.
- முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் மேற்பார்வையாளர் அதை கையெழுத்திட்டு, பின் வேட்பாளர்களிடம் அளிப்பார். அதை பரிசோதித்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின், மீண்டும் மேற்பார்வையாளர் கையெழுத்திடுவார்.
- அதன்பின் அது கரும்பலகையில் எழுதப்படும். அதன் பின்பே ஒரு சுற்றுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.
- அனைத்து பணிகளும் வீடியோ எடுக்கப்படும்.
- ஒரு தொகுதிக்கு மொத்தம் 5 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் தேர்வு செய்யப்பட்டு அதன் வாக்குகள் எண்ணப்படும்.
- இதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், விவிபாட் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
- இந்த எந்திரங்கள் கணினி ரேண்டம் எண் மூலம் ரேண்டமாக (சீரின்றி) தேர்வு செய்யப்படும்.
- மொத்தம் ஒரு சுற்று வாக்குகளை 14 மேஜைகள் போட்டு எண்ணுவார்கள். இதனால் ஒரு சுற்று வாக்குகளை எண்ண 30 நிமிடமும் ஆகும். முடிவுகளை அறிவிக்க 10 நிமிடம் ஆகும். இதனால் மொத்தமாக ஒரு சுற்றை எண்ண 40 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications