அதிர்ச்சி அளித்த எக்ஸிட் போல் முடிவுகள்.. மீண்டும் களமிறங்கும் சந்திரபாபு.. நாளையே அவசர மீட்டிங்!
லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் நாளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆலோசனை கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் நாளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆலோசனை கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தற்போது இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் முடிந்துள்ளதால் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதுதான் எதிர்கட்சிகளை கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

பாஜக வெற்றி
இதுவரை வெளியான எல்லா கருத்து கணிப்புகளும் பாஜகவிற்கு ஆதரவாகவே இருக்கிறது. 99% கருத்து கணிப்புகள் பாஜகவின் கூட்டணியே வெல்லும் என்று கூறியுள்ளது. அதிலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முழு மெஜாரிட்டி பெற்று வெற்றி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

என்ன இடங்கள்
சராசரியாக இது வரை வந்த கணிப்புகளின் படி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களை வெல்லும். காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 125 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த கருத்து கணிப்பை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகும், அதை வைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் நினைத்தது போல அல்லாமல் பாஜகவின் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளது.

நாளை சந்திப்பு
இதனால் எதிர்க்கட்சிகள் போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் பாழாய் போகும், நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து நாளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. நாளை மாலை சந்திரபாபு நாயுடு மீண்டும் எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடு சந்திப்பு
சந்திரபாபு நாயுடு தற்போது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் நோக்கில் இருக்கிறார். இந்த கருத்து கணிப்பால் கட்சிகள் சிதற கூடாது என்று அவர் முடிவெடுத்துள்ளார். அதனால் உடனடியாக நாளையே கட்சிகளை ஒரு குடைக்குள் கொண்டு வர சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications