தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 20 இடங்களைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 20 இடங்களைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 1 இடத்தில் வெல்லும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தற்போது இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியா உள்ளது. இதைத்தான் நாடே தற்போது எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

கருத்து கணிப்பு
தேர்தல் முடிந்துள்ளதால் சென்ற வாரம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. வரிசையாக நிறைய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்புகள் வெளியானது. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிப்பில் கூறப்பட்டது.

டைம்ஸ் நவ் என்ன
இந்த நிலையில் தற்போது தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் திமுக அணி 20 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுக்கும்.

மற்ற கட்சிகள்
அதேபோல் அதிமுக கூட்டணி 16 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது. அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு இரண்டில் ஏதாவது ஒரு கட்சி 1 இடத்தை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இது யார் என்று விவரம் வெளியாகவில்லை.

மக்கள் நீதி மய்யம்
இது இல்லாமல், புதிய திருப்பமாக மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 1 இடத்தில் வெல்லும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் யாரும் மக்கள் நீதி மய்யத்திக்கு வெற்றி என்று கணிக்கவே இல்லை. மாறாக தற்போது டைம்ஸ் நவ் மட்டும் தேர்தலில் ஒரு இடம் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications