என்னுடைய முதல் வாக்கு.. முதல் முறை வாக்காளர்களுக்காக தனி பிரசாரத்தை முன்னெடுத்த பிரதமர் மோடி
டெல்லி: 18வது லோக்சபா தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதினை உறுதி செய்யும் விதமாக "என்னுடைய முதல் வாக்கு - தேசத்தின் பொருட்டு" என்ற புதிய பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மார்ச் இரண்டாவது வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18வது லோக்சபா தேர்தலில் சாதனையை உருவாக்கும் வகையில் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசினார். அப்போதும் இது குறித்து பிரதமர் கூறுகையில், சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் "என்னுடைய முதல் வாக்கு - தேசத்தின் பொருட்டு" என்பதைத் தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு. நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு இலாபகரமானதாக இருக்கும். நானும் கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனைப்பதிவினை ஏற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள்" என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், முதல் முறை வாக்காளர்கள் அதிக அளவில் தேர்தல் நடைமுறையில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக #MeraPehlaVoteDeshKeLiye என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி இதை பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
Let us make our electoral process even more participative. I call upon people from all walks of life to spread the message, in their own style, among first time voters - #MeraPehlaVoteDeshKeLiye! https://t.co/LTSdDV5Bkf
— Narendra Modi (@narendramodi) February 27, 2024
"நமது தேர்தல் நடைமுறையில் இன்னும் அதிக அளவில் பங்கேற்போம். இதற்காக அனைத்து தரப்பு மக்களும் தங்களின் சொந்த ஸ்டைலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் இந்த செய்தியை பரப்ப வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications