பெரும் அச்சுறுத்தல்.. உயர்மட்டக் குழு விசாரணை நடத்துக: உள்துறை அமைச்சகத்துக்கு லோக்சபா செயலர் கடிதம்
டெல்லி: உயர்மட்டக் குழு விசாரணை நடத்த மக்களவை செயலாளர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடிதம் எழுதினார்.
இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் தொடங்கிய நிலையில், லோக்சபா நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் மஞ்சள் வண்ண புகை குண்டை வீசினர். அதோடு ஒருவர் லோக்சபா அரங்குக்குள் குதித்து சபாநாயகர் இருக்கை நோக்கி ஓடினார். இந்தச் சம்பவத்தால் அவையில் இருந்த எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சில எம்.பிக்கள், அவர்கள் 2 பேரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் ஒரு பெண், ஒரு ஆண் ஸ்பிரே அடித்து கோஷமிட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையை சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்த நபர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் என்பது தெரியவந்தது. இவர்கள் கர்நாடகாவின் மைசூர் - குடகு நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பெயரில் விசிட்டர் பாஸ் பெற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்தது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது யாருக்கும் நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதி கிடையாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றம் செல்லும் அனைத்து சாலைகளும் முழுதாக அடைக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பை முழுதாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை செயலகத்திற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல, நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை நடத்த வேண்டும் என மக்களவை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மக்களவை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications