அடடே!லோக்சபா சபாநாயகர் தேர்தல்:பாஜக கூட்டணியின் ஓம் பிர்லாவுக்கு ஜெகன் கட்சியின் 4 எம்பிக்கள் ஆதரவு?
டெல்லி: லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பிக்கள் ஆதரவு தரக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லாவும் இந்தியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷும் களம் காண்கின்றனர். லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்றும் இன்றும் அனைத்து புதிய எம்பிக்களும் பதவியேற்றனர். தற்காலிக சபாநயகராக நியமிக்கப்பட்ட பர்த்ருஹரி மகதாப் அனைத்து எம்பிக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மரபுப்படி சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் 18-வது லோக்சபா சபாநாயகர் தேர்வில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள் கோரிய துணை சபாநாயகர் பதவியை மத்திய அரசு தரப்பு விட்டுத்தர மறுத்தது.
இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் களம் காண்கிறார். பாஜக கூட்டணி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. நாடு விடுதலைக்குப் பின்னர் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஓம் பிர்லாவுக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 4 எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்கக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டிலுமே ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, பாஜக- தெலுங்குதேசம்- ஜனசேனா கூட்டணி இடையேதான் போட்டி இருந்தது. இதில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவி ஆட்சியையும் பறிகொடுத்தது. ஆனாலும் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications