லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்ய ஜூன் 26ம் தேதி! வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அடுத்து என்ன நடக்கும்?
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் சமீபத்தில் தான் வெளியான நிலையில், மக்களவை சபாநாயகரைத் தேர்வு செய்ய ஜூன் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.

மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற நிலையில், அவருடன் மற்ற மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். மேலும், திங்கள்கிழமை மத்திய அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.
சபாநாயகர் யார்: அடுத்த கட்டமாக இப்போது பலரது கவனமும் மக்களவை சபாநாயகர் யார் என்பதில் தான் இருக்கிறது. இதற்கிடையே மக்களவை சபாநாயகரைத் தேர்வு செய்ய ஜூன் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாட்கள் கழித்து புதிய சபாநாயகரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், 18வது லோக்சபாவின் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் தேர்தலில் தேர்வான அனைத்து எம்பிக்களும் பதவியேற்க உள்ளனர். இதையடுத்து ஜூலை 3ஆம் தேதி இந்தக் கூட்டத்தொடர் நிறைவடைய இருக்கிறது.
திரௌபதி முர்மு: சபாநாயகர் நியமிக்கப்பட்ட பிறகு ஜூன் 27-ம் தேதி லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி உரையாற்றுகிறார். இந்த என்டிஏ அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதில் கவனம் செலுத்த உள்ளது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும் எனத் தெரிகிறது.
ஏன் முக்கியம்: கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போது, பாஜக வசமே மக்களவை சபாநாயகர் பதவி இருந்தது. இப்போது கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு சபாநாயகர் பதவியைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் கூட்டணி ஆட்சி அமையும் போது சபாநாயகர் பதவி ரொம்பவே முக்கியம் என்பதால் பாஜக தரப்பு சபாநாயகர் பதவியைத் தன்னிடமே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம் இந்தியா கூட்டணியும் சபாநாயகர் தேர்தலில் கடும் போட்டி தர முடிவு செய்துள்ளது. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அழுத்தம் தர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது லோக்சபாவில் பாஜக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு 234 உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications