அதிரடி! ராகுலுக்கு புதிய பொறுப்பு! லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா போட்ட ஆர்டர்! என்ன தெரியுமா? அடடே
டெல்லி: ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் எம்பியான நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய பாஜகவை எதிர்த்து அவர் கடுமையாக பேசி சபையை அதிர வைத்தார். இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு புதிய பொறுப்பு வழங்க சபாநாயகர் ஓம்பிர்லா பரிந்துரைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். இவர் மோடி பெயர் குறித்து பேசியது தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து மீண்டும் ராகுல் காந்தி எம்பியானார். இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்று பேசினார்.

மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மீது அவர் சரமாரியானா குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மணிப்பூர் சம்பவம் மூலம் பாரதமாதாவை கொலை செய்துவிட்டதாக பாஜகவினரை சாடினார். மேலும் மணிப்பூரை இரண்டு துண்டாக்கிய நிலையில் பாஜகவினர் தேசபக்தர்கள் இல்லை. தேசவிரோதிகள் என சாடினார். மேலும் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் இருப்பதையும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
ராகுல்காந்தி சுமார் 15 நிமிடங்கள் வரை லோக்சபாவில் பேசியபோது சபையை அதிர்ந்தது. இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு புதிய பொறுப்பு வழங்கும் நோக்கில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி ராகுல் காந்தி பாதுகாப்பு துறையின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்க அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஓம்பிர்லா வெளியிட்ட அறிவிப்பில், காங்கிரஸ் கட்சியின் ராகல் காந்தி, அமர்சிங் ஆகியோர் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராகவும், ஆம்ஆத்மியின் எம்பி சுஷில் குமார் ரிங்குவை விவசாயம், கால்நடை பாரமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் நிலைக்குழுவுக்கும், லட்சத்தீவு எம்பி பைசல் முகமதுவை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக நிலைக்குழு உறுப்பினராகவும் பரிந்துரைத்துள்ளார். இதில் பைசல் முகமதுவும் ராகுல் காந்தியை போலத்தான். அதாவது பைசல் முகமதும் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி தண்டனையை நிறுத்தி வைத்து மீண்டும் எம்பியானவர் தான்.
ஓம்பிர்லாவின் இந்த உத்தரவுப்படி ராகுல் காந்திக்கு புதிய பொறுப்பு கிடைக்க உள்ளது. நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் பல துறைகளுக்கு நிலைக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பவர். இந்த குழு என்பது அந்த துறை சாரந்த வருடாந்திர அறிக்கை, மானிய கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதுதொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால் அதனை ஆய்வு செய்யும். மேலும் குறிப்பிட்ட துறையில் புதிய கொள்ககைளை உருவாக்கவும் இந்த நிலைக்குழு உறுப்பினர்களின் பணியாகும்.












Click it and Unblock the Notifications