பரபரக்கும் பெங்களூர், டெல்லி ஆலோசனை கூட்டங்கள்... பங்கேற்ற 12 தமிழ்நாடு தலைவர்கள் பட்டியல் இது!
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆகியவற்றின் ஆலோசனை கூட்டங்களால் அரசியல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் முதலில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. பாட்னாவில் 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தற்போது பெங்களூருவில் 26 கட்சிகளின் தலைவர்கள் திரண்டிருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் அணியில் பலம் வாய்ந்த பல கட்சிகள் இருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவும் பதில் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்தக் கூட்டணியில் அதிமுகவை தவிர வலிமையான கட்சிகளும் இல்லை. பெரும்பாலும் மாநில கட்சிகள், அதிருப்தி கோஷ்டி பிரிவுகள், லெட்டர் பேடு கட்சிகள்தான் பாஜக கூட்டணியில் உள்ளன.
இந்த இரு கூட்டணிகளிலும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணியில் திமுக, மதிமுக , விசிக, மமக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவையும் பாஜக கூட்டணியில் அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
பெங்களூர் மற்றும் டெல்லி கூட்டங்களில் பங்கேற்ற தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்கள் விவரங்கள்:
பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டம்
திமுக- முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதிமுக- வைகோ
விசிக- திருமாவளவன்
மமக- ஜவாஹிருல்லா
கொமதேக- ஈஸ்வரன்
முஸ்லிம் லீக்- காதர் மொகிதீன்
டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்
அதிமுக- எடப்பாடி பழனிசாமி
பாமக- அன்புமணி ராமதாஸ்
தமாகா- ஜிகே வாசன்
இமகமுக- தேவநாதன்
இஜக- பாரிவேந்தர்
புதிய தமிழகம்- டாக்டர் கிருஷ்ணசாமி












Click it and Unblock the Notifications