தேர்தல் போர்! போர்! நாளை பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்-அதிமுக, பாமக உட்பட 30 கட்சிகள் பங்கேற்பு!
டெல்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட மொத்தம் 30 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் உள்ளன. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணி படுவேகமாக நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23-ந் தேதி 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இன்றும் நாளையும் 2-வது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 24 அல்லது 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களுக்கு பதிலடி தரும் வகையில் டெல்லியில் நாளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 24 கட்சிகளுடன் கூடுதலாக சில புதிய கட்சிகளுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகள்:
- பாஜக
- அதிமுக
- சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே)
- தேசிய மக்கள் கட்சி
- தேசிய ஜனநாயக மக்கள் கட்சி
- சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா
- ஜன்நாயக் ஜனதா கட்சி
- இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவநாதன் கட்சி)
- அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன்
- இந்திய குடியரசு கட்சி
- மிசோ தேசிய முன்னணி
- தமிழ் மாநில காங்கிஅஸ்
- ஐபிஎப்டி (திரிபுரா)
- போடோ மக்கள் கட்சி
- பாட்டாளி மக்கள் கட்சி
- மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி
- அப்னா தள்
- அஸ்ஸாம் கன பரிஷத்
- ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி
- நிஷாத் கட்சி
- ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
- அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி)
- சிரோமணி அகாலி தள் சயுன்க்
- ஜனசேனா
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதியதாக இணையும் கட்சிகள்
- தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்)
- லோக் ஜன் சக்தி கட்சி (ராம்விலாஸ்)
- இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா
- ராஷ்டிரிய லோக் சமதா கட்சி
- விகாஷீல் இன்ஷான் கட்சி
- சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (ராஜ்பார்)
தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாக தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் நாளை டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அணுகுமுறை, லோக்சபா தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications