காங்கிரஸை வெளியேற்ற சொல்லி திமுகவை மிரட்டும் பாஜக? சிவி சண்முகம் போட்டுடைத்த "டெல்லி உண்மை"?
டெல்லி: லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றித்தான் ஆக வேண்டும் என திமுகவை பாஜக மேலிடம் மிரட்டுவதாக அதிமுக இபிஎஸ் கோஷ்டி எம்.பி. சிவி சண்சமுகம் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மும்முரமாக இருக்கிறது. அதிமுகவின் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் கோஷ்டிகளை ஒருங்கிணைப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி பாஜக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவில் முரண்டுபிடிக்கும் இபிஎஸ் கோஷ்டியை பல்வேறு வியூகங்கள் மூலம் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது பாஜகவின் நம்பிக்கை.

பாஜக, இபிஎஸ் கோஷ்டிகள் வியூகம்
அதேநேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் இருக்க வேண்டும் என்பதும் பாஜகவின் வியூகம். குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறக் கூடாது என்பதிலும் டெல்லி பாஜக மும்முரமாக இருக்கிறது என்பது வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள். அப்படி திமுக அணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் பாஜகவை கழற்றிவிட்டு அதிமுக இபிஎஸ் கோஷ்டி, காங்கிரஸ் கூட்டணிக்கு கரம் நீட்ட தயாராக இருக்கிறது என்பதும் தொடர்ந்து பரவும் செய்தி.

சிவி சண்முகத்தின் பேச்சால் சலசலப்பு
இந்நிலையில்தான் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சிவி சண்முகம் பேசிய பேச்சு பாஜக, திமுக அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலின் போது திமுக- பாஜக கூட்டணி அமையும் என சண்முகம் கூறியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், சிவி சண்முகம் எப்போது பாஜகவில் சேர்ந்தார் என எனக்கு தெரியவில்லை. காசியில் இருந்துவிட்டு இப்போதுதான் கோவை வந்துள்ளேன். சென்னைக்கு சென்ற பின்னர் சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்தது குறித்து விசாரிக்கிறேன் என கிண்டலடித்திருந்தார்.

பாஜக கடும் எதிர்ப்பு
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அ இ அ தி மு கவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான @CVShanmugamofl அவர்கள் பாஜக வுடன் தி மு க கூட்டணி வரும் என்றும், தி மு கவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தி மு க அரசின் செயல்பாடுகளை தலைவர் @annamalai_k அவர்களின் தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும் பாரதிய ஜனதா கட்சி எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை. மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் 'நிதானமில்லாமல்' பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் @BJP4TamilNadu குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன் என கூறியிருந்தார்.

காங்.க்கு திமுக மூலம் ஆப்பு வைக்கும் பாஜக?
தமிழக பாஜகவினர் கடுமையாக எதிர்க்கும் சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சில் இன்னொரு அரசியல் விவகாரம் அடங்கி இருக்கிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸை கூட்டணியில் இருந்து திமுக வெளியேற்ற வேண்டும் என நெருக்கடி தருகிறது டெல்லி பாஜக மேலிடம் என்பதுதான். இது நீண்டகாலமாக அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகிற விவகாரம்தான். டெல்லி பாஜகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்கேயும் உயிர்ப்புடன் இருந்துவிடக் கூடாது என்பதுதான். இதனாலேயே காங்கிரஸ் கட்சியை குழிதோண்டிப் புதைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை வாரி அணைத்துக் கொள்கிறது பாஜக. இந்தியாவிலேயே காங்கிரஸ் உயிர்ப்புடன் இருக்கும் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதுவும் திமுக கூட்டணியின் தயவில்தான் காங்கிரஸ் இங்கே உயிர்ப்புடன் இருக்கிறது. திமுக கூட்டணி இல்லாமல் போனால் காங்கிரஸ் நிலைமை பரிதாபம்தான். அதைத்தான் டெல்லி பாஜக விரும்புகிறது. இதனையே சிவி சண்முகமும் தமது பொதுக்கூட்டப் பேச்சில் போட்டுடைத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம்












Click it and Unblock the Notifications