மஞ்சள் நிற புகையாக மாறிய லோக்சபா.. அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் போட்ட கலர் பாம்.. பின்னணி என்ன?
டெல்லி: டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகை குண்டுகளை போட்டனர். இதனால் லோக்சபா மஞ்சள் நிற புகையால் சூழப்பட்டது. இந்நிலையில் தான் அந்த புகை குண்டுகள் குறித்த பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது. தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா, ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.

அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின் சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.
லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள் வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும் பதறியடித்து ஓடினர். இருப்பினும் சில எம்பிக்கள் துணிச்சலாக அந்த நபர்களை பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? எதற்காக லோக்சபாவுக்குள் அத்துமீறி நுழைந்தனர்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் இந்த புகை குண்டுகளை போட்ட நபர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் பாஸ் பெற்று லோக்சபாவுக்குள் பார்வையாளர்களாக சென்றது தெரியவந்தது. இதற்கிடையே தான் அவர் போட்ட மஞ்சள் நிற புகையை வெளியேற்றிய மர்மபொருள் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேநாள்.. லோக்சபாவில் அத்துமீறி நுழைந்த 2 பேர்.. 22 ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
அதாவது லோக்சபாவுக்குள் நுழைந்த நபர்கள் புகையை உருவாக்கும் குண்டுகளை எடுத்து வந்து கைவரிசை கா்டடியுள்ளார். புகையை உருவாக்கும் குண்டுகளை அவர்கள் சபைக்குள் தூக்கி எரிந்து உள்ளனர். மேலும் சர்வாதிகாரத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர். இந்த நபர்களின் இத்தகைய செயலால் லோக்சபாவின் ஒருபகுதி முழுவதும் மஞ்சள் நிற புகையாக சூழ்ந்தது. இதனால் எம்பிக்கள் அலறியடித்து ஓடினர்.
கலர் பாம்ஸ் என அழைக்கப்படும் இது திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சாதாரணமாக பேன்ஸி கடைகள் மற்றும் ஆன்லைனில் குறைந்த விலைகளிலேயே கிடைக்கும். இந்த குண்டுகளில் இருந்து வெளியேறும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications