Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதேநாள்.. லோக்சபாவில் அத்துமீறி நுழைந்த 2 பேர்.. 22 ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் நுழைந்து எம்பிக்களை பதறவைத்தனர். கடந்த 22 ஆண்டுகளுக்கு இதேநாளில் தான் நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது. தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா, ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.

After 22 years of Parliament attack todya two men entered Lok Sabha andopened caninsters

அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின் சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.

லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள் வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும் பதறியடித்து ஓடினர். இருப்பினும் சில எம்பிக்கள் துணிச்சலாக அந்த நபர்களை பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? எதற்காக லோக்சபாவுக்குள் அத்துமீறி நுழைந்தனர்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நாடாளுமன்ற கட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் .ள்பட பல எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இந்த சம்பவம் நடந்த நாள் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 2001ல் நாடாளுமன்ற வாளகத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து இந்த நாளில் தான் தாக்கினர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாக இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தான் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் 2 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். கடந்த கடந்த 2001ம் ஆண்டு இதேநோளில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் 5 பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடவர்கள் பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். மொத்தம் 30 நிமிடங்கள் வரை இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. இன்று காலையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட பல எம்பிக்கள் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று 2 பேர் லோக்சபாவில் நுழைந்து அத்துமீறி நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+