பூடான் இளவரசர் இருந்த.. ஏர் இந்தியா விமானத்தில் எறும்புகள் அணிவகுப்பு.. கடைசி நேரத்தில் விமானம் ரத்து
டெல்லி: லண்டனுக்குப் புறப்படவிருந்த விமானத்தில், எறும்புகள் கூட்டம் கண்டறியப்பட்ட நிலையில், அந்த விமானத்தை ஏர் இந்தியா ரத்து செய்தது. பூடான் இளவரசரும் இந்த விமானத்தில் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனம் ஏர் இந்தியா. கடன் சிக்கலால் தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் இந்த ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்கப் பல ஆண்டுகளாக மத்திய அரசு முயன்று வருகிறது.
ஆனால், பெரும் கடனில் தத்தளிக்கும் இந்நிறுவனத்தை வாங்க யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

விமானத்தில் எறும்புகள்
ஏர் இந்தியா மோசமான சேவை மற்றும் முறையாக விமானங்களைப் பராமரிக்காமல் இருப்பது ஆகியவை குறித்துத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் லண்டன் செல்லவிருந்த விமானத்தில் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏஐ 111 என்ற விமானம் புறப்படத் தயாரானது.

பூடான் இளவரசர்
அப்போது விமானத்தின் பிஸ்னஸ் க்ளாஸ் இருக்கைகள் இருந்த இடத்தில் எறும்புகள் கூட்டம் அணிவகுத்துச் சென்றதால், அதிலிருந்த பயணிகள் அவதி அடைந்தனர். குறிப்பாக பூடான் நாட்டு இளவரசர் ஜிக்மே நம்ஜியேல் வாங்சக்கும் இந்த விமானத்தில் தான் லண்டன் செல்ல இருந்தார். இருப்பினும், எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் புறப்படுவது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அது மாலை 5.20 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தின் தரமும் அதன் சேவைகளும் மோசமாக உள்ளதாகப் பல ஆண்டுகளாகவே புகார்கள் உள்ளன. இருப்பினும் இதைச் சரி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தங்களுக்கு நாடுகளுக்கு வரும் விமானங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை ஐரோப்பிய ஒன்றியம் மிகக் கடுமையாகக் கண்காணிக்கும். பாதுகாப்பு குளறுபடிகள் காரணமான பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் ஏர்லைன் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்படக்கூடாது என்றால், அரசு இதில் உடனடியாக தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.

டாடா குழுமம்
அதேநேரம் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாலும் ஏர் இந்தியா ஏற்கனவே பல கோடி நஷ்டத்தில் இயங்குவதாலும் பெரியளவில் பணத்தைச் செலவழிக்க மத்திய அரசு விரும்பவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க பல்வேறு நிறுவனங்களும் தயங்கி வரும் நிலையில், டாடா குழுமம் மீண்டும் விமான துறையில் நுழையும் வகையில் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாடு சுதந்திரம் அடைந்த டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவைத் தான் அப்போதைய அரசு அரசுடைமையாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications