சலூன் கடையில் புகுந்த ராகுல் காந்தி! ஆடி போன உரிமையாளர்..கட்டிப் பிடித்து வேதனையுடன் சொன்ன வார்த்தை!
டெல்லி: டெல்லியில் சலூன் கடை ஒன்றில் தனது தாடியை ட்ரிம் செய்து கொள்ளச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அந்த கடையின் உரிமையாளருடன் நடத்திய உரையாடல் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என சலூன் கடைக்காரரான அஜித் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான மக்களுக்கு தெரிந்த முகமாக இருப்பவர் ராகுல் காந்தி. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன், ஒரு தேசிய கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் மக்களோடு மக்களாக பழகி வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நீதி யாத்திரை நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் எளிமையாக பழகியது மக்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்கள், மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடியது, தொழிலாளர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டது என ராகுல் காந்தியின் செயல்பாடுகள் கவனிக்க வைத்தது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின் போது கோவைக்கு பிரச்சாரத்திற்காக வந்திருந்த போது திடீரென சாலையில் காரில் இருந்து இறங்கி ஓடி சென்டர் மீடியினை தான் தாண்டி குதித்து இனிப்பு கடையில் சென்று இனிப்பு வாங்கினார். மேலும் கடை உரிமையாளர் பணியாளர்களுடன் வெகு சகஜமாக பழகி கடையில் இனிப்புகளை வாங்கி ருசி பார்த்த ராகுல் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல் பிரச்சாரத்திற்காக செல்லும் இடங்களில் திடீரென சலூன் கடைகளுக்கு சென்று முக சவரம் செய்வது என ராகுல் காந்தியின் சம்பவங்கள் ஏராளம். நேற்றும் அப்படித்தான் ஒரு சம்பவத்தை செய்து இருக்கிறார் ராகுல் காந்தி. டெல்லியில் அஜித் என்பவர் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலை திடீரென அந்த சலூன் கடைக்குள் சென்ற ராகுல் காந்தி தனது தாடியை ட்ரிம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
சலூன் கடை உரிமையாளரான அஜித் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில் தொடர்ந்து அவருடன் சகஜமாக பேசினார் ராகுல் காந்தி. தொழில், வருமானம் எல்லாம் எப்படி இருக்கிறது என கேட்க நாள் முழுவதும் உழைத்தாலும் அன்று மாலையிலேயே சேர்த்து வைக்க கூட எதுவும் இல்லை என வருத்தத்துடன் ராகுல் இடம் கூறினார் அஜித். இந்நிலையில் அஜித்தின் வேதனையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி இந்தியாவில் கடினமாக உழைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலையை அஜித்தின் வார்த்தைகள் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"कुछ नहीं बचता है!"
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2024
अजीत भाई के ये चार शब्द और उनके आसूं आज भारत के हर मेहनतकश गरीब और मध्यमवर्गीय की कहानी बयां कर रहे हैं।
नाई से लेकर मोची, कुम्हार से लेकर बढ़ई - घटती आमदनी और बढ़ती महंगाई ने हाथ से काम करने वालों से अपनी दुकान, अपना मकान और स्वाभिमान तक के अरमान छीन लिए… pic.twitter.com/1gYGdui2ll
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”எதுவும் மிச்சமில்லை!" அஜித்தின் இந்த வார்த்தைகளும், அவரது கண்ணீரும் இன்று இந்தியாவின் ஒவ்வொரு உழைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கதையைச் சொல்கிறது. முடிதிருத்தும் தொழிலாளி முதல் செருப்புத் தொழிலாளி வரை, குயவர் முதல் தச்சர் வரை - வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம், உடல் உழைப்புத் தொழிலாளர்களின் தங்கள் கடை, வீடு மற்றும் அவர்களின் சுயமரியாதையை கூட சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைக்குத் தேவை, வருமானத்தைப் பெருக்கி, குடும்பங்களுக்குச் சேமிப்பைத் திரும்பக் கொண்டுவரும் இத்தகைய நவீன நடவடிக்கைகளும், புதிய திட்டங்களும்தான். மேலும், திறமைக்கு உரிய தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் உங்களை முன்னேற்றப் படிக்கட்டுகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு சமூகம் தேவை” என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications