பிரியங்கா பிரதமர் வேட்பாளர், ராமர் கோவிலை வெறுக்கும் காங். தலைவர்கள்.. ஆச்சார்ய பிரமோத் 'கலகம்'
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக பிரியங்கா காந்தியைதான் காங்கிரஸ் முன்னிறுத்த வேண்டும்; காங்கிரஸில் பிரியங்கா காந்தியைவிட சிறந்த தலைவர் யாருமே இல்லை என கலகக் குரல் எழுப்பி இருக்கிறார் அக்கட்சியின் சாமியார் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்.
காங்கிரஸ் கட்சியில் தீவிர இந்துத்துவா கொள்கைகளை வலியுறுத்தி பேசுகிறார் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம். திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு விவகாரத்தில், ராவணன் பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான் சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள். சனாதன தர்மத்தை எதிர்க்கும் கட்சிகளை "இந்தியா" கூட்டணியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சனாதன தர்மத்தின் பக்கம் நிற்கப் போகிறீர்களா? அல்லது சனாதன தர்மத்துக்கு எதிராக நிற்கப் போகிறீர்களா? என்பதை முடிவு செய்யும் தருணம் இது என பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

பிரியங்கா பிரதமர் வேட்பாளர்: இப்போது காங்கிரஸ் கட்சியில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில், 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பிரியங்கா காந்தியையே முன்னிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும் சரி இந்தியா கூட்டணியிலும் சரி பிரியங்கா காந்தியை தவிர வேறு யாருமே பிரதமர் பதவிக்கான தலைவர் இல்லை என கூறியுள்ளார்.
ராமர், ராமர் கோவில்: மேலும், கடவுள் ராமரை வெறுக்கிறவர் ஒரு இந்துவாக இருக்க முடியாது. ராமர் கோவில் கட்டுவதற்கான முட்டுக்கட்டைகளை ஒட்டுமொத்த உலகமும் அறியும். யார் ராமரை வெறுக்கிறார்கள்; யார் வழிபடுகிறார்கள் என்பது என்றும் புதிரானதும் அல்ல. காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக உண்மையை மறைக்க வேண்டும் என்பதும் இல்லை. ராமரையும் ராமர் கோவிலையும் வெறுக்கக் கூடிய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கின்றனர் எனவும் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் ஆதரவு: காங்கிரஸ் கட்சியின் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கருத்தை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜாவும், இன்று ரிபப்லிக் டிவி விவாத த்தில் காங்கிரஸ் தலைவர் ஆசார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இந்து விரோத, ராமர் விரோத தலைவர்கள் உள்ளனர் என்று கூறினார். அதில் முக்கியமான இந்து விரோதி ராமஜன்ம பூம குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த ப.சிதம்பரம், பிரதானமானவர் எனவும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications