Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ரத்து என்று சொல்வோர் ஜோக்கர்கள்.. சாமுவேல் ஜெரோம் விளாசல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏமனில் இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும், இஸ்லாமிய தலைவர்கள் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாக இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கு அமெரிக்க மதபோதகர் கே.ஏ.பவுல் என்பவர் உரிமை கோரியிருந்தார். மட்டுமல்லாது நிமிஷா விடுவிக்கப்படுவார் என்றும் கூறியிருந்தார். இதனை சாமுவேல் ஜெரோம் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விஷயத்தில் நிமிஷாவின் தாயுடன் சேர்ந்து, அவரை காப்பாற்ற போராடி வருபவர்தான் சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம்.

Yemen

ஜெரோம் ஒன் இந்தியா ஆங்கிலம் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க மதபோதகர் கே.ஏ.பவுல் ஒரு கோமாளி என்றும், நிமிஷா வழக்கில் அவருடைய பங்களிப்பு எதுவும் இல்லை எனவும் சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.

மரண தண்டனை நிறுத்தம்

"நிமிஷாவின் மரண தண்டனை குறித்து ஏமன் அரசாங்கம் காலவரையற்ற தடை விதித்துள்ளது. அதாவது மரண தண்டனைக்கு குறிப்பிட்ட தேதி எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மரண தண்டனை தேதியை கேட்டால், அரசு ஒரு தேதியை கொடுக்கும். அப்துல் ஃபதாவின் (கொல்லப்பட்டதாக சொல்லப்படும் தலால் அப்துலின் சகோதரர்) குடும்பத்தினருக்கே மன்னிப்பு மற்றும் மரண தண்டனைக்கான முழு உரிமையும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்று தேதி கேட்டால், தேதி வழங்கப்படும். இதுதான் சட்ட நிலை" என்று கூறினார்.

ஜோக்கர் கே.ஏ.பவுல்

இந்த வழக்கில் தான் முயற்சி எடுத்ததாகவும், அதன் விளைவாகவே மரண தண்டனை நிறுத்தப்பட்டதாகவும் அமெரிக்க பாதிரியரான கே.ஏ.பவுல் உரிமை கோரியிருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெரோம்,

"நீங்கள் கே.ஏ. பாலைப் பற்றி பேசுகிறீர்கள். எந்த சர்க்கஸிலும் நிறைய ஜோக்கர்கள் இருக்கலாம். நான் ஜோக்கர்களைப் பற்றி பேச இங்கு வரவில்லை, உண்மையான விஷயத்தைப் பற்றி பேச வந்துள்ளேன். உண்மையில் எதுவும் நடக்கவில்லை. குடும்பத்துடன் எந்த விவாதமும் நடக்கவில்லை. ஒரு ஏமன் பெரியவரை அருகில் வைத்துக்கொண்டு ஒரு பேட்டி கொடுப்பது உண்மையானது ஆகாது. அவருடைய நோக்கங்கள் என்னவென்று எனக்குத் தெரியாது. நீங்கள் கே.ஏ. பாவுலிடம்தான் அதைக் கேட்க வேண்டும்.

நிமிஷாவை காப்பாற்றுவதில் சிக்கல்

ஒரு ஏமன் பெரியவருடன் உட்கார்ந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதால் நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற முடியாது. பேச்சுவார்த்தையின்போது பழங்குடி மரபுகள் மற்றும் உள்ளூர் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

தலால் கொல்லப்பட்ட நிலையில், இந்த நிலையில் கூட அவரது குடும்பத்திற்கு யாரும் மரியாதை கொடுக்கவில்லை என்று பேசப்பட்டு வருகிறது. தலாலின் சகோதரர் அப்துல் ஃபதாவின் குடும்பத்தினருக்கு எந்த மதிப்பும் இல்லை என பேச்சு அடிபடுகிறது. இந்த சூழலில் திடீரென ஒருவர் வந்து, எல்லாம் மாறிவிட்டது என்று சொன்னால், அது அப்துல் ஃபதாவை அவமதிக்கும் செயல். ஏனென்றால், அவர்தான் மன்னிப்பதற்கான ஏகபோக அதிகாரம் படைத்தவர். இப்படி செய்வதால் நிமிஷாவை காப்பாற்ற முடியாது" என்றார்.

இந்தியாவிலிருந்து முயற்சி

மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஜெரோம் விளக்குகையில், "சரியான நேரத்தில் பல விஷயங்கள் ஒன்று சேர்ந்தன. சகோதரர் சாண்டி கேரள ஆளுநரைச் சந்தித்து மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றினார். ஷேக் அப்துல் மாலிக் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பேசினார்.

முதலில், 'இரத்தப் பணம்' என்ற வார்த்தையை மக்கள் மனதில் இருந்து எடுக்க விரும்புகிறேன். அரபியில் தியா என்று ஒன்று உள்ளது. இரத்தப் பணம் என்பது ஆங்கிலத்தில் ஒரு கெட்ட விஷயம். இரத்தப் பணம் என்று நீங்கள் சொல்லும்போது, நாங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து எவ்வளவு பணம் கொடுப்போம் என்று சொல்கிறோம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது தவறு.

ரத்தப் பணம் விளக்கம்

என் குடும்பத்தில் யாராவது கொல்லப்பட்டால், கொலையாளி பின்னர் என்னிடம் வந்து, 'என்னை மன்னியுங்கள், நான் உங்களுக்கு பணம் தருகிறேன்' என்று சொன்னால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர்கள் என் குடும்பத்தையோ அல்லது சிந்திய ரத்தத்தையோ மதிக்கவில்லை என்று அர்த்தம்.

எனக்கும் அப்துல் ஃபதாவிற்கும் இடையே நடக்கும் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் என்னால் மன்னிப்பு கேட்க மட்டுமே முடியும். எங்கள் நபர் ஒரு குற்றம் செய்துவிட்டார் என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன். நாங்கள் வருந்துகிறோம், உங்களிடம் கருணை கேட்கிறோம். நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இதுதான் பேச்சுவார்த்தைகளின் தொனி.

பேச்சுவார்த்தை

குடும்பம் மன்னிப்பதற்கு பச்சை கொடி காட்டினால் மட்டுமே, பணம் பற்றிய பேச்சு வரும். இதேபோன்ற இதற்கு முந்தைய வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் வரை வழங்கப்பட்டும் என்று சொன்ன பிறகும் கூட மன்னிப்பு வழங்கப்படவில்லை. பணத்தால் மன்னிப்பை வாங்க முடியாது.

குடும்பம் மன்னிக்கவில்லை என்றால் வேறு சட்ட வழிகள் எதுவும் இல்லை. எல்லா உரிமைகளும் குடும்பத்தினருக்கே உள்ளன. நிமிஷா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டவர். அதனால் இது மிகவும் கடினமானது.

மலிவான விளம்பரம்

இந்த விஷயத்தில் மலிவான விளம்பரம் தேட நினைப்பவர்கள் நிமிஷாவின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு வர மாட்டார்கள். இதுதான் ஏமனில் எழுதப்படாத விதி. எந்த பழங்குடி பேச்சுவார்த்தையிலும், பொதுவெளியில் வருபவர்கள் போலியான நபர்கள்.

தற்போதைய நிலவரப்படி, சட்ட மற்றும் தூதரக பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்களின் கூற்றுப்படி, நிமிஷா விடுதலையாகிறார் என்ற கே.ஏ. பாலின் கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் மன்னிப்பே ஒரே நம்பிக்கையாக உள்ளது" என்று ஜெரோம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+