"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்?
டெல்லி: மத்திய கிழக்கு போர் காரணமாக கேஸ் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே PNG எனப்படும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை இருக்கும் இடங்களில் கட்டாயம் அதைத் தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மொத்தமாக கேஸ் கனெக்ஷன் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலைமை கையைவிட்டுப் போகும் சூழல் உருவாகவில்லை என்றாலும் கூட ஆங்காங்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இயற்கை எரிவாயு சப்ளை
அதாவது PNG எனப்படும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை இருக்கும் இடங்களில் அதைப் பயன்படுத்தாமல் LPG பயன்படுத்தினால் அவர்களின் எல்பிஜி கேஸ் கனெக்ஷன் நிரந்தரமாக நிறுத்தப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரவு
இது தொடர்பான உத்தரவை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டது. அதில் பி.என்.ஜி. இணைப்புக்கு மாற, வீடுகளுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும் என்றும் அதற்குள் மாறத் தவறினால், சமையல் எரிவாயு விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர் காரணமாக சப்ளை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், எல்பிஜி பற்றாக்குறையால் இந்தியா போராடி வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் PNGக்கு மாற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
எல்ஜிபி கேஸை நாம் பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்தே வாங்குகிறோம். அதிலும் பிரச்சனைக்குரிய ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தே நமது பெரும்பாலான கேஸ் வருகிறது. ஆனால், PNG அப்படி இல்லை. பல்வேறு தரப்பிடம் இருந்தும் பிஎன்ஜி வாங்குகிறோம்.. உள்நாட்டு உற்பத்தியும் கூட கணிசமாக இருக்கிறது. இதனால் பி.என்.ஜி. அதிக நம்பகத்தன்மை கொண்ட எரிபொருளாகப் பார்க்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் போலல்லாமல், பிஎன்ஜி நேரடியாகக் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுவதால், சிலிண்டர் நிரப்புவதற்கான தேவையை இது நீக்குகிறது.
புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
புதிய உத்தரவுப்படி, ஒரு ஏரியாவில் பி.என்.ஜி. இணைப்பு இருக்கிறது என்ற குறித்துத் தெரிவித்தவுடன், அதற்கு மாறுவது கட்டாயமாகிறது. இந்த தகவல் வந்து 3 மாதங்களில் குறிப்பிட்ட வீடு அல்லது வணிக நிறுவனங்கள் பிஎன்ஜிக்கு மாற வேண்டும். இல்லையென்றால் எல்பிஜி சப்ளை முழுமையாக நிறுத்தப்படும் என்று அந்த உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு உள்ளது. அதாவது குறிப்பிட்ட சில இடங்களில் பி.என்.ஜி. இணைப்பு வழங்குவது சாத்தியமற்றது என சப்ளையரால் சான்றிதழ் வழங்கப்பட்டால் சமையல் எரிவாயு விநியோகம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மத்திய அரசு
அதேபோல நாட்டில் பிஎன்ஜி உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குழாய்களைப் பதிப்பதற்கான அனுமதிகள் இனி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், அவை தானாக அனுமதி அளிக்கப்பட்டதாகவே கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களைத் தாண்டி கூடுதல் கட்டணங்களை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகங்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் பி.என்.ஜி. இணைப்பு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications