மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு!
டெல்லி: மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு தொடர்பான பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, ஹோட்டல் துறையும் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் -ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக மேற்கு ஆசிய பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக, சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் வியாபாரத்தை மேற்கொள்வதில் சிரமம் அடைந்து வருவதாக தொழில் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மேற்கு ஆசிய மோதலை மத்திய அரசு கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்தது.
இந்த பிரச்சினையில் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்காததே தற்போதைய தட்டுப்பாட்டிற்கு காரணம் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்தார். அதேபோல் மாநிலங்களவையில் பேசிய ஜான் பிரிட்டஸ், 2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குறிப்பிட்டு பேசினார். அதேபோன்று தற்போதைய ஈரான் தொடர்பான சூழல் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதே போல தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து, எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் அதன் விலை உயர்வில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தொடர் அழுத்தங்களுக்கிடையே, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை இந்தியாவின் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று விநியோக ஏற்பாடுகள் செய்வது, விலை உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விநியோகம் தொடர வழிமுறைகள் வகுப்பது போன்ற முக்கிய அம்சங்களும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வு காணும் முக்கியமான கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் பதற்றம் நீடித்தால், அதன் தாக்கம் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்திலும் பொருளாதாரத்திலும் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மேற்கு ஆசியப் போர் காரணமாக உருவான எல்பிஜி தட்டுப்பாடு விவகாரம் தற்போது தேசிய அளவிலான முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications