நாட்டின் ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்! ஜூன் 30இல் பொறுப்பேற்கிறார்
டெல்லி: நமது நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நமது நாட்டிற்கு ராணுவம், கடற்படை விமானப் படை என்று மூன்று படைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.. இந்த மூன்று படைகளுக்கும் தனித்தனியாகத் தளபதிகள் இருப்பார்கள்.

இப்போது நாட்டின் ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இருக்கிறார். கடந்த 2022 ஏப்ர் மாதம் முதல் இவர் தான் ராணுவ தளபதியாக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ராணுவத்திற்கு விரைவில் புதிய தளபதி அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் காரணமாக அறிவிப்பு வராமல் இருந்தது.
இதற்கிடையே இப்போது இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நமது நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இருக்கும் நிலையில், வரும் ஜூன் 30ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ராணுவ தளபதி பொறுப்பை ஏற்க உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது துணை ராணுவ தளபதியாக பணிபுரிந்து வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக நியமிக்கப்படுகிறார். அவர் 2024 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பொறுப்பேற்பார்" என கூறப்பட்டுள்ளது.
இப்போது ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் த்விவேதி 30வது இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி டிசம்பர் 1984இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள்ஸின் 18வது பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அதே பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
கடந்த 39 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ந்து ராணுவத்தில் பணிபுரிந்துள்ள நிலையில், பல்வேறு பொறுப்புகளை அவர் கவனித்துள்ளார். வடக்கு இராணுவத் தளபதியாக 2022 முதல் 2024 வரை இருந்துள்ளார். மேலும், காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்துள்ளார்.
தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு கடந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஒரு மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications