கருணாநிதி சிலை திறப்பு விழா.. கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு.. இன்னும் பலரை அழைக்க முடிவு!
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
Recommended Video

டெல்லி: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அதன் ஒருகட்டமாக தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தி உள்ளார்.
இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள் பெரிய சந்திப்பு கூட்டத்தை நடத்த உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார்.
இந்த கூட்டத்திற்கு மத்தியில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா தொடர்பாக ஸ்டாலின் பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார். நேற்றே ஸ்டாலின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இந்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

சிலை திறப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது.

நேற்றில் இருந்து
மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது. இதற்காகத்தான் ஸ்டாலின் பல அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார். நேற்றில் இருந்து அவர் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

சரத்பவார்
இதன் ஒருகட்டமாக இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார்.இந்த சந்திப்பில் கனிமொழியும் உடன் இருந்தார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக சரத்பவார் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

டெல்லி முதல்வர்
அதன்பின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்டாலின் கருப்பு உடை அணிந்து சென்று இருந்தார்.

மேலும் சிலர்
இன்று அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆகிய தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க உள்ளார்.

பாஜக தலைவர்கள்
ஆனால் ஸ்டாலின் பாஜக தலைவர்களை இந்த விழாவிற்கு அழைப்பாரா என்று தகவல் வெளியாகவில்லை. அவர் பிரதமர் மோடியையோ, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையோ சந்திக்க நேரம் கேட்டதாக தகவல்கள் வரவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications