பிரதமர் மோடியின் வாழ்க்கை படமாகிறது.. நடிகர் - இயக்குநர் யார் தெரியுமா? பெயர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் பெயர், மோடியாக நடிக்கும் நடிகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பல்வேறு உலக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

maa-vande-malayalam-actor-unni-mukundan-will-play-pm-narendra-modi-biopic-movie

அதேபோல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு ‛மா வந்தே' (Maa Vande) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், மோடியாக நடிக்கிறார்.

இவர் நடிகர் தனுஷ் நடித்த சீடன் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆனார். அதன்பிறகு சூரியின் ‛கருடன்' திரைப்படத்தில் நடித்தார். தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ‛மோடி பயோபிக்' திரைப்டத்தை ‛சில்வர் கேஸ்ட் கிரியேஷன்' என்ற நிறுவனம் சார்பில் வீர் ரெட்டி தயாரிக்கிறார்.

திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் கிராந்தி குமார் இயக்குகிறார். இப்படம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி உருவாக உள்ளது. மேலும் பிரதமர் மோடிக்கும், அவரது தாய் ஹீராபென் மோடிக்கும் இடையேயான பந்தத்தை காட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற உள்ளது.

இது PAN India திரைப்படமாக தயாராக உள்ளது. இதனால் இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் உருவாக உள்ளது. ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+