இறங்கி அடிக்கும் காங்கிரஸ்! இந்தி மாநிலமான மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு பயங்கர அடியாம்! பரபர சர்வே
டெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே யார் வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்த புதிய சர்வே ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு லோக் சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இது லோக்சபா தேர்தலின் அரையிறுதியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த 5 மாநில தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி இருக்கிறது.
மத்தியப் பிரதேச தேர்தல்: கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை அடைந்த நிலையில், அது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மீண்டும் அதே வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கி வேலை செய்கிறார்கள். மறுபுறம் இந்தி பேசும் மாநிலங்களில் வலுவாக இருக்கும் பாஜக இந்த மூன்றையும் விட்டு விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது.
இதில் முக்கியமான இந்தி பேசும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வரும் நவ. 17ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது.
புது சர்வே: இதற்கிடையே மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து லோக் போல் என்ற அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 116 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி அங்கே தனிப்பெரும்பான்மையுடன் வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக லோக் போல் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவால் ஆட்சியைத் தக்க வைக்க முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது. அங்கே பாஜகவால் 98-110 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று லோக் போல் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. அங்கே பாஜகவால் 43-45% வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வெல்லும்: மறுபுறம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 120-132 இடங்கள் கிடைக்கும் என்று லோக்போல் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை விடக் கூடுதலான இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று லோக் போல் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜுன் சமாஜ் கட்சிக்கும் ஓரளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. இருப்பினும், இந்தத் தேர்தலில் பகுஜுன் சமாஜ் கட்சியால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றே இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. பகுஜுன் சமாஜ் கட்சியால் 2-4% வாக்குகளுடன் அதிகபட்சம் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளால் அங்கே 0-4 இடங்கள் வரை கைப்பற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: கடந்த 2018 ம.பி தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும் வென்றன. அப்போது கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இருப்பினும், அது 15 மாதங்கள் மட்டுமே நீட்டித்தது. காங்கிரஸின் இளம் தலைவராக இருந்த சிந்தியா கமல்நாத்திற்கு எதிராகக் கலகம் செய்தார். அவருடன் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமான நிலையில், கமல்நாத்தின் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில், மீண்டும் பாஜக சார்பில் சவுஹான் முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications