எதிரி நாட்டு எல்லையில் கூட இப்படி இல்லையே... தடைகளை உடனடியாக அகற்றுங்கள் - சு. வெங்கடேசன் எம்.பி
சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக முள்வேலிகள் போட்டு 14 அடுக்கு அரண்களை அமைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது என்று மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
டெல்லி: இந்த இடம் ஏதோ இந்தியா சீனா எல்லையைப் போல இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் போல உள்ளது. சொந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிராக இத்தனை தடுப்புகளை ஏற்படுத்துவதா? என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை பார்ப்பதற்காக சென்ற அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் 70வது நாளை எட்டப்போகிறது.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் குடிநீர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காசிப்பூர் பகுதியில் பல அடுக்கு அரண் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. முள்வேலிகளும் கான்கிரீட் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தடைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக எம்பிக்கள் இன்று காசிப்பூர் பகுதிக்கு பேருந்து மூலம் பயணம் செய்தனர். அதனை சு. வெங்கடேசன் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்திக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் காஸிபூர் நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். திமுக வின் சார்பில் கனிமொழி, திருச்சி சிவா, விசிக சார்பில் தொல் திருமாவளவன் மற்றும் இரவிக்குமார் சிபிஐ சார்பில் செல்வராஜ் சிபிஎம் சார்பில் ஆஃரீப்பும் நானும் இக்குழுவில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை பார்ப்பதற்காக காசிப்பூர் எல்லைக்கு வந்தோம். இந்த இடம் ஏதோ இந்தியா சீனா எல்லையைப் போல இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் போல உள்ளது. சொந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிராக இத்தனை தடுப்புகளை ஏற்படுத்துவதா? 14 அடுக்கு தடுப்புகளை உருவாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார் சு. வெங்கடேசன்.
இது ஜனநாயக நாடுதானா? உச்சநீதிமன்றத்திற்கு மிக அருகில், நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இதுபோன்ற அரண்களை ஏற்படுத்தியுள்ளனர். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ளதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications