ஸ்விஸ் பணம் பற்றி நிர்மலா சீதாராமன்.. ’இது புது டிசைன்’என கிண்டல் செய்த சு.வெங்கடேசன்!
டெல்லி: ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் பற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் விளக்கத்தை மதுரை எம்பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. இதனைத்தொடர்ந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறியது.

கருப்பு பணம் பற்றி கேள்வி
இந்த நிலையில் லோக் சபாவில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பதில்
அதில், அண்மையில் வெளியான அறிக்கைகளின்படி, கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் மூதலீடு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இருந்தாலும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் எதுவுமில்லை. கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை என்று தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் கிண்டல்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பணம் 50 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு உயர்ந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளார். அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள, அனைத்து முதலீடுகளையும் கருப்பு பணமாக கருத கூடாது என்று விளக்கத்தையும் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.

பாஜக மீது விமர்சனம்
அதேபோல் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் கருப்பு பணம் மீட்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணம் ஒழிப்பு ஆகிய நடவடிக்கையை குறிப்பிட்டுள்ள சு.வெங்கடேசன், கருப்பு பணம் குறித்து பாஜகவினர் சொல்லிவந்த வாக்குறுதியில் இது புது டிசைன் என்று கிண்டல் செய்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications