டங்ஸ்டன் சுரங்கம்.. ஏலத்துக்கு முன்பே கேட்டோம்! தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கல! சுரங்கத் துறை பகீர்
டெல்லி: மதுரை அருகில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு வழங்கிய சுரங்க ஏல உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஏலத்துக்கு முன்பாகவே தமிழக அரசிடம் கருத்து கேட்கப்பட்டதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மதுரை அருகில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு வழங்கிய சுரங்க ஏல உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் ஏலத்துக்கு முன்பாகவே தமிழக அரசிடம் கருத்து கேட்கப்பட்டதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கர் பட்டியில் 20 புள்ளி 16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் தோன்றுவதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் முன்மொழியப்பட்டது. இந்த ஏலத்துக்கு முன்பாகவே தமிழக அரசிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது நில அட்டவணை விவரங்கள் கிடைக்கவில்லை என மாநில அரசு தெரிவித்திருந்தது.
மேலூர் தாலுகா, அரிட்டாபட்டி கிராமத்தில், 47.37 ஹெக்டேருக்கு மேல் கிரானைட் குவாரி குத்தகைக்கு, 2008 செப்டம்பர் 19ல், மாநில பொதுத்துறை நிறுவனமான, TAMINக்கு, 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, TAMIN குத்தகைக்கு ஒரு சரண்டர் திட்டத்தை சமர்ப்பித்தது.
Response to the tweet of Hon’ble Chief Minister of Tamil Nadu on auction of Nayakkarpatti Tungsten block in Tamil Nadu
— Ministry of Mines (@MinesMinIndia) November 29, 2024
The Mines and Minerals (Development and Regulation) Act, 1957 has been amended by the Mines and Minerals (Development and Regulation) Amendment Act, 2023 with… https://t.co/9GBDYdUFs3
கூடுதலாக, அரிட்டாபட்டி கிராமத்தின் குறிப்பிட்ட சர்வே 379/1, 379/2 மற்றும் சர்வே எண். மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமங்களில் 137 பல்லுயிர் பாரம்பரிய தளமாக உள்ளது. கிடைத்த தகவலின்படி, மொத்த பரப்பளவு 20.16 சதுர கி.மீ., பரப்பளவில் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களுக்குள் உள்ள 1.93 சதுர கி.மீ., மட்டுமே பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் விருப்பமான ஏலதாரராக அறிவிக்கப்பட்டதன் மூலம் தொகுதி வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. 07.11.2024 அன்று ஏலத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை, 2024 பிப்ரவரி முதல் ஏலத்திற்கு விடப்பட்டது, ஏலத்திற்கு எந்த எதிர்ப்பும் இருப்பது குறித்து மாநில அரசு உட்பட எந்தத் தரப்பிலிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. மேலும் அந்த தொகுதியை ஏலத்தில் இருந்து கைவிடுமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைக்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications