மேஜிக் நம்பர் 391.. துணை ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கும்? சிபி ராதாகிருஷ்ணன் வெல்ல வாய்ப்பு அதிகம்
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனும், ‛இந்தியா' கூட்டணி சார்பில் சுதர்ஷன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தான் இந்த தேர்தல் எப்படி நடக்கும்? வெற்றி பெற எத்தனை எம்பிக்களின் ஆதரவு வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் உடல்நிலை குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9 ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டுள்ளார். அதேபோல எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி அரசியல் சார்பு இல்லாத ஆந்திராவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிட்டுள்ளார்.
இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தி்ல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடக்கிறது. ரகசியமான முறையில் இந்த ஓட்டுப்பதிவு நடக்கும். நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டில் வேட்பாளர்களை 1, 2 என எம்பிக்கள் தரவரிசைப்படுத்தலாம். சிபி ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகியோரில் முதல் விருப்பம், 2வது விருப்பம் என்று வேட்பாளர்கள் ஓட்டளிக்கலாம். இதில் ‛முதல் விருப்பம்' என்பதில் அதிகமான ஓட்டுகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்கள்.
இந்த தேர்தலில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். அதன்படி பார்த்தால் தற்போது லோக்சபாவில் 542 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 238 எம்பிக்களும் உள்ளனர். மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 781 ஆக உள்ளது. 781 எம்பிக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
இதனால் தேர்தலில் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்றால் ஒருவர் 391 எம்பிக்களின் ஓட்டுகளை பெற வேண்டும். தற்போது லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 425 எம்பிக்கள் உள்ளனர். அதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பாஜக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்பிக்கள் உள்ளதால் பாஜக வேட்பாளருக்கான பலம் 436 ஆக மாற உள்ளது. மாறாக ‛இந்தியா' கூட்டணி எம்பிக்களின் பலம் இருசபைகளின் எம்பிக்களை சேர்த்து 324 ஆக மட்டுமே உள்ளது. இதுதவிர மற்ற கட்சிகளுக்கு 66 எம்பிக்கள் உள்ளனர்.
இவர்களின் ஓட்டுகள் இந்த தேர்தலில் முக்கியமானதாக பார்க்கப்படும். அதேவேளையில் இந்த தேர்தலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி மற்றும் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 2 கட்சிகளும் சொன்னது போல் தேர்தலை புறக்கணிக்கும் பட்சத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை 770 ஆக குறையும். அப்படியென்றால் மேஜிக் நம்பர் 386 ஆக குறையும். அதாவது 386 ஓட்டுகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட உள்ளார். இதனால் இந்த தேர்தலில் எளிதாக பாஜகவின் என்டிஏ வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் எளிதாக வெல்வார்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications