MahaKumbh Mela 2025: ரூ7,000 கோடி பட்ஜெட்.. உ.பி. அரசுக்கு கொட்டும் வருவாய் மட்டும் ரூ2 லட்சம் கோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநில அரசு நடத்தும் மகா கும்பமேளாவுக்கு இன்று முதல் 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக உ.பி. மாநில அரசு ரூ7,000 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. மகா கும்பமேளாவுக்காக சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மகா கும்பமேளா மூலமாக உத்தப்பிரதேச மாநில அரசுக்கான வருவாய் மட்டும் ரூ2 லட்சம் கோடி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.

மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். வட இந்தியாவின் புனித நகரங்களில் நடைபெறும் இந்த மகா கும்பமேளா இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறுகிறது. பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுதல் முதன்மை நிகழ்வாகும்.

mahakumbh mela 2025 2025 spirtuality uttar pradesh

மகா கும்பமேளா தொடங்கிய இன்று முதல் நாள் மட்டும் சுமார் 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடி இருக்கின்றனர். அடுத்து வரும் 45 நாட்களில் சுமார் 40 கோடி பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து வந்து புனித நீராடுவர் என்பது எதிர்பார்ப்பு.

இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை உ.பி. மாநில அரசு செய்திருக்கிறது. மகா கும்பமேளா காலத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு வகையிலான பாலங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவு நிலமும் ஒதுக்கப்பட்டு அதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மொத்தம் ரூ7,000 கோடி நிதியை செலவிட்டிருக்கிறது. இந்த மிகப் பெரிய ஆன்மீக திருவிழா மூலமாக சுமார் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என்பது உ.பி. அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதாவது ஒரு பக்தர் சராசரியாக ரூ. 5,000 செலவு செய்தாலே 40 கோடி பக்தர்கள் என்ற கணக்கில் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்கின்றனர் உ.பி. அதிகாரிகள். அதேநேரத்தில் பக்தர்கள் சராசரியாக ரூ. 10,000 செலவிட்டால் இந்த வருவாய் மேலும் இரு மடங்கு அதிகமாக அதாவது ரூ4 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அம்மாநில அதிகாரிகள்.

2019-ம் ஆண்டு கும்பமேளா நிகழ்ச்சியில் மாநில அரசுக்கு ரூ. 1.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது என்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்போது 24 கோடி பக்தர்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+