கருணாநிதி, ஜெ.க்கு கிடைத்த அதே வாய்ப்பு.. கைகூடி வருகிறது.. டெல்லியில் விட்டதை பிடிப்பாரா ஸ்டாலின்?
தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது.
டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கலந்து பெரிய சந்திப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.
இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கைகூடி வந்துள்ளது.

பிரதமர் பதவி
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது. 40 எம்.பி தொகுதிகளை கொண்டு இருக்கும் தமிழகத்தின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் இந்த பிரதமர் வேட்பாளர் தேர்வில் ஸ்டாலினின் குரல் முக்கியமானதாக பார்க்கப்படும். 2019க்கான பிரதமர் வேட்பாளரை ஸ்டாலினே கூட கைகாட்ட வாய்ப்பு இருக்கிறது.

காவிரி பிரச்சனை
அதேபோல் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை ஸ்டாலின் ஒரே மேடையில் சந்திக்கிறார். இதனால் ஸ்டாலின் இவர்களுடன் காவிரி பிரச்சனை குறித்தும் பேச வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் குமாரசாமியின் மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதால், இவர்கள் மூவரும் ஒரே மேடையில் சந்திப்பது காவிரி பிரச்சனையில் சில தீர்வுகளுக்கு முன்னெடுப்பாக இருக்கலாம். இதனால் மீண்டும் காவிரியில் திமுகவின் கை ஓங்க வாய்ப்பு உள்ளது.

மீண்டும் வருகிறது
ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு முக்கிய தலைவர்கள் தேசிய அரசியலில் எப்படி ஆதிக்கம் செலுத்தினார்களோ அதற்கு பின் இப்போது ஸ்டாலினுக்கும் அதேபோல் ஒரு வாய்ப்பு அமைந்து இருக்கிறது. காவிரி பிரச்சனை தொடங்கி பிரதமர் வேட்பாளர் வரை பல முக்கிய விஷயங்களில் திமுகவும் ஸ்டாலினும் மீண்டும் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசிய அளவில் ஸ்டாலினுக்கு தற்போது பெரிய அரசியல் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஸ்டாலினுக்கு நடக்குமா?
இதற்கு முன் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது இல்லை. இத்தனை நாட்கள் சைலன்ட் மோடில் இருந்த ஸ்டாலின், இன்றில் இருந்து புதிய பாதையில் செல்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்துதான் அவரின் அரசியல் எதிர்காலம் உள்ளது.. திமுகவின் எதிர்காலமும்!
-
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்?












Click it and Unblock the Notifications