மகாகும்பமேளா: மத்திய பாஜக அரசின் சர்ச்சைக்குரிய புதிய 3 குற்றவியல் சட்டங்களின் டிஜிட்டல் கண்காட்சி!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை விளக்கும் டிஜிட்டல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்குகிற வகையிலும் இந்த டிஜிட்டல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பாரதீய நியாயச் சட்டம் 2023, பாரதீய நகரிக் சுரக்ஷா அதினியம் 2023 மற்றும் பாரதீய சாட்சியச் சட்டம் 2023 ஆகிய இந்தியாவின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் விரிவான மற்றும் புரிந்துகொள்ளகூடிய எளிதான விளக்கம், திரிவேணி மார்க்கில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவர்ச்சிகரமான டிஜிட்டல் கண்காட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இந்தக் கண்காட்சியில் இந்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், புதிய கொள்கைகள், சட்டங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு பற்றிய தகவல்கள் அனைத்தும் அனமார்ஃபிக் சுவர்கள், எல்.இ.டி தொலைக்காட்சி திரைகள், எல்.இ.டி சுவர்கள் மற்றும் ஹாலோகிராஃபிக் சிலிண்டர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. புதிய சட்டங்கள் நீதி மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டவை என்றும், நீதி மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட கட்டமைப்பில் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒலி-காட்சி ஊடகங்கள் மூலம் கண்காட்சி தெளிவாக விளக்குகிறது.
புதிய சட்டங்கள், இந்தியாவின் நீதி அமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், நவீன சமூகத்தின் தேவைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று புதிய சட்டங்களும் இந்தியாவின் நீதித்துறை அமைப்பில் ஒரு வரலாற்று மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சைபர் கிரைம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற சமகால சவால்களை எதிர்கொள்ள ஒரு புதிய கட்டமைப்பை இவை அறிமுகப்படுத்துகின்றன. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் உறுதி செய்கின்றன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications