பாஜக ஆட்சி அமைக்காவிட்டால் தேசியவாத காங்-காங்.-க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்: மிலிந்த் தியோரா
டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா ஆட்சி அமைக்காவிட்டால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.
மகாராஷ்டிவில் 105 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருக்கிறார். 56 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிவசேனா, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருமா? என்கிற கேள்வி நீடிக்கிறது.

இன்னொருபக்கம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிரி அல்ல என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
அத்துடன் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Maharashtra’s Governor should invite NCP-Congress - the second largest alliance - to form the government now that BJP-Shivsena have refused to do so
— Milind Deora मिलिंद देवरा (@milinddeora) November 10, 2019
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா தமது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் 2-வது பெரிய கட்சிகள் என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications